அனைவருக்கும் வணக்கம். இப்பொழுதுதான் 350 ஆவது பதிவை போட்டதுபோல் இருந்தது. அதற்குள் 375-ஆவது பதிவு வந்துவிட்டது.இநத பதிவில் வித்தியாசமான ப்ளேயரை போடலாம் என்று உள்ளேன. 12 எம்.பி. உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வி.எல்.சி.ப்ளேயரைப்போல அனைத்துவிதமான பைல்களையும் இது ஆதரிக்கின்றது.ஸ்கீரினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.
கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மணிரத்தினம் அவர்களின் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். அந்தமாதிரி படங்களில் தேவையான வெளிச்சத்தை நாம் கூட்டிவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Transparancy அளவினை மாற்றுவது மூலம் படத்தினை வேண்டிய அளவு மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள பிற வசதிகள் கீழே-
மற்ற ப்ளேயரில் இல்லாத வசதி இதில் கூடுதலாக உள்ளது. இதில் Shift + Enter அழுத்துவதன் மூலம் Desktop Mode க்கு மாற்றிக்கொள்ளலாம்.நமது Desktop பின்புறத்தில் படம் ஓடும்.இது தவிர ஒரே ஸ்கிரீல் 4 விண்டோக்களை ஓப்பன் செய்யலாம்.(ஒரு வீடியோபடம் பார்ப்பதே தலைவலி. இதில் 4 விண்டோக்களில் படம் ஓடினால்...? என நீங்கள் கேட்பது புரிகின்றது)கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில பல வீடியோக்களை ஒரே விண்டோவில் கொண்டுவருவது பற்றி பற்றிய வீடியோ டுடோரியலை கீழே காணுங்கள்.
இதன் பயன்பாட்டில் பதிவின் நீளம் கருதி கொஞ்சமாகதான் பதிவிட்டுள்ளேன்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்