நாம் தயாரிக்கும் பைல்கள்.எடுக்கும் புகைப்படங்கள்.டவுண்லோடு செய்யும் பாடல்கள் என அனைத்தையும் கம்யுட்டரில New Folder என பெயரிட்டு சேமித்து வைப்போம். பின்னர் அந்த பைல்களை அதற்கென உள்ள ட்ரைவ்களில் தனியே காப்பி செய்துவைப்போம். ஆனால் முதலில் சேமித்துவைத்த போல்டரை டெலிட் செய்யமாட்டோம். ஞாபகமாக மறந்துவிடுவோம். இது நாளடைவில் ஒவ்வோரு ட்ரைவிலும் மலைமலையாக சேரந்துவிடும்.ஒரு டிரைவில இருக்கும் பைல்கள் அடுத்த டிரைவிலும் இருக்கும். இவ்வாறு இரட்டைவேடமிட்டு இருக்கும் பைல்க ளில் ஒன்றை அழிக்கவே இந்த சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. இதில் டாக்குமெண்டுகள்.இ-மெயில்கள்-e-mail,photos புகைப்படங்கள்.பாடல்கள்songs, மற்றும் advanced ஆக pulverizer.synchronize filles.junk file cleaner.excel duplicate finder.bookmark cleaner ஆகியவைகளையும் இது கண்டறிந்து நீக்கும்.2 எம்.பிக்குள் உள்ளஇலவச சாப்ட்வேரான இதனை பதிவிறகக இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில 5 டேப்கள் இருக்கும். முதலில் பேசிக். அடுத்ததாக அவுட் லுக்கில் இ-மெயில் கிளினர். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

மூன்றாவதாக இசை யை கண்டறியும் டேப். இசையில எந்த வகை பைல் என்பதனை தேர்வு செய்து ஸ்கேன் கொடுக்கவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

அதைப்போலவே புகைப்படங்களும் தேவையான புகைப்படத்தின் பைலின் வகையை கொடுக்க வேண்டும்.

இதில் உள்ள வகைகளை தேர்வு செய்து பின்னர் அதில் உள்ள Scan Now என்பதனை கிளிக் செய்யவும். கீழே உள்ள விண்டோவினை பாரு்ங்கள்.

ஸ்கேன் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் தேவையில்லாத பைல்களை தேர்வு செய்து டெலிட்கொடுத்துவிடவேண்டும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இந்த சாப்ட்வேர் மூலம் டூப்ளிகேட்டாக உள்ள புக்மார்க்.எக்ஸெல்.ஷிஸ்டரி என அனைத்தையும் டெலிட் செய்யலாம்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன் பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்