Showing posts with label password.pen drive.windows xp.windows 7.vista.. Show all posts
Showing posts with label password.pen drive.windows xp.windows 7.vista.. Show all posts

வேலன்-அதிக பாஸ்வேர்ட்களை சுலபமாக கையாள

வெவ்வெறு இ-மெயில் முகவரிகள் - சில தளங்களின் பாஸ்வேர்ட்கள்.வங்கி கணக்கு விவரங்கள் - ஏ.டி.எம.கார்டின் பாஸ்வேர்ட்கள் என அனைத்து விவரங்களையும் தனிப்பட்ட போல்டரிலோ - பென்டிரைவிலோ - பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம்.இதனை நீங்கள் பயன்படுத்தியவுடன் அனைத்து பாஸ்வேர்ட்களையும் நினைவில் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இந்த சாப்ட்வேருக்கு நாம் தரும் மாஸ்டர் பாஸ்வேர்ட் மட்டும் நாம் ஞாபகமாக நினைவில் கொண்டால் போதும்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் மாஸ்டர் பாஸ்வேர்ட் கொடுக்கவும. இந்த மாஸ்டர் மாஸ்வேரட் தான் அனைத்து விண்டோக்களையும் ஒப்பன் செய்யும் பாஸ்வேர்ட் உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் நம்மிடம் உள்ள அனைத்து சாவி கொத்துக்களையும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி அந்த சாவியை பத்திரமாக வைத்துக்கொள்ளுவோம் அல்லவா. அதுபோல்தான் இந்த மாஸ்டர் பாஸ்வேர்ட்..எனவே இதனை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.மறுமுறை அதையே மீண்டும் தரவும்.
பாஸ்வேர்ட தயாரானதும் உங்களுக்கு கீழ்கண்ட தகவல் வரும்.
ஒ.கே. கொடுத்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ மீண்டும் ஒப்பன் ஆகும். இதில நீ்ங்கள் முதலில் கொடுத்த மாஸ்டர் பாஸ்வேர்டினை மீண்டும் கொடுக்கவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் மெனு கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நியு டேடா பைலை ஓப்பன் செய்யவும்.
இதில் நியு என்பதனை கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்கள தகவல்களை பதிவு செய்யவும்.நான் உதாரணத்திற்கு ஜி-மெயிலின் இ-மெயில் முகவரி -யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்துள்ளேன்.
கடைசியில் சேமிக்கவும். இதைப்போலவே உங்களிடம் உள்ள கணக்குகளை இதுபோல் ஒவ்வொன்றாக சேமிக்கவும்.
இப்போது நீங்கள் இந்த பேனலை திறந்து கொள்ளுங்கள். நீங்கள் திறக்க இருக்கும் தளமோ - இ-மெயில் விண்டோவினையோ திறந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அதில் இந்த தளத்தில் இருந்து அந்த தளத்திற்கு கர்சரால் இழுத்து விடுங்கள். 


உங்களுக்கு அந்த தளம் ஒப்பன் ஆகிவிடும்.யூசர் நேம் தட்டச்சு செய்வதோ -பாஸ்வேரட் நினைவு கொள்ளவோ தேவையில்லை.நேரம் அதிகம் நமக்கு மிச்சமாகும். உங்கள் பர்சனல் தகவல் அடங்கிய பைலை உங்கள் பென்டிரைவில் கொண்டு செல்லாம். எந்த கணிணியிலும் பென்டிரைவை இணைத்து தகவலை பெறலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...