புகைப்படங்கள் நாம் நிறைய எடுப்போம். அவற்றை கணிணியில் ஏதாவது ஒரு போல்டரில் போட்டுவைப்போம். மீண்டும் பழைய புகைப்படங்களை டிலிட்செய்யாமல் கேமராவில் புதிய புகைப்படங்களையும் எடுப்போம். மீண்டும் மொத்தபடங்களையும் ஏதாவது ஒரு போல்டரில் போட்டுவைப்போம். இதுபோல் ஒவ்வொருமுறையும் செய்யும் சமயம் நிறைய புகைப்படங்களின் டுப்ளிகேட் நமது டிரைவில் நிறைந்திருக்கும். புகைப்படங்களின் டுப்ளிகேட் கண்டுபிடிக்க.புகைப்படத்தினை ரீபேக் செய்திட.புகைப்படத்தினை ரீ சைஸ் செய்ந்திட புகைப்படத்தினை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட என அனைத்துப்பணிகளுக்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.2 எம்.பி.ககும் குறைவான கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://download.cnet.com/photo-vacuum-packer/3000-12511_4-75329704.html செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் மாற்றம் செய்யவேண்டிய போல்டரை தேர்வு செய்யவும. இப்போது உங்களுடைய போல்டரில் டுப்ளிகேட் புகைப்படங்கள் இருந்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.தேவையான புகைப்படத்தினை வைத்துக்கொண்டு தேவையில்லாததை நீங்கள் டெலிட செய்துவிடலாம். அடுத்துள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 1 மெகா பிக்ஸலில் இருந்து 15 மெகா பிக்ஸல் வரை நாம் புகைப்படங்களை மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக நாம் பிறருக்கு நமது புகைப்படங்களை இமெயிலில் அனுப்ப விரும்பினால் இதில் உள்ள 1 மெகாபிக்ஸல் தேர்வு செய்து புகைப்படங்களின் அளவினை குறைத்து சுலபமாக அனுப்பிவிடலாம்.அதுபோல புகைப்படங்களை போஸ்டராகவும் அச்சடிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதில் கூடுதல் ஆப்ஷன்களும் கொடுத்துள்ளார்கள்.தேவையானதை கிளிக் செய்து இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நமக்கு தேவையான இடத்தினை தேர்வு செய்யலாம்.
இறுதியாக நமக்கான ரிசல்ட் கிடைக்கும். ;இதில் நாம் செய்த மாற்றங்கள். அளவினை குறைத்திருந்தால் குறைக்கப்பட்ட அளவு விவரம் என அனைத்தும் நமக்கு தெரியவரும்.
இறுதியாக நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மீண்டும் வேறுஒருபோல்டரை தேர்வு செய்வதோ அல்லது வெளியேறுவதோ செய்யலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.