Showing posts with label photo.velan.recovery.video.audio.வேலன்.போட்டோ.வீடியோ.ஆடியோ.மீட்டுஎடுத்தல்.. Show all posts
Showing posts with label photo.velan.recovery.video.audio.வேலன்.போட்டோ.வீடியோ.ஆடியோ.மீட்டுஎடுத்தல்.. Show all posts

வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க

திருச்சியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பருடய நண்பர் திருமணத்திற்கு எடுத்த புகைப்படங்கள் வைத்திருந்த கேமரா மெமரி கார்டினை தவறுதலாக டெலிட் செய்துவிட்டோர். அதில் வைத்திருந்த அனைதது போட்டோகளும் டெலிட் ஆகிவிட்டது.போட்டோக்களை மீண்டும் கொண்டுவர ஏதாவது சாப்ட்வேர் இருக்கா என கேட்டடார். இணையத்தில் தேடும் சமயம் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. 10 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://www.stellarinfo.co.in செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Recover Photo.Audio & Video கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள்  கணிணியில் உள்ள டிரைவிலிருந்தோ - எக்ஸ்டர்னல் மெமரி கார்டிலிருந்தோ போட்டோக்களை ரெக்கவரி செய்யலாம். இதில் நமக்கான டிரைவ் தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் குறிப்பி்ட்ட டிரைவிலிருந்து போட்டோ,வீடியோ.ஆடியோ ஆகியவனை ரெக்கவரி ஆகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படங்கள் வீடியோக்கள் ப்ரிவியூபார்க்கும் வசதியும் உள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் கீழே உள்ள ரெக்கவரி கிளிக செய்திட உங்களுக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் ஆடியோக்கள் ரேக்கவரி ஆகும். கீழே உள்ள விணடோவில் பாருங்கள்.
இறுதியாக இதில் ப்ரிவியூவினையும் காணலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அனைத்து பைல்களும் ரெக்கவரி ஆனதும் இதில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நாம் சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்து அதற்கான இடத்தினை குறிப்பிட்ட உடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு ஆடியோ,வீடியோ.புகைப்படங்கள் தனிதனி போல்டராக உள்ளதை காணலாம். தேவையானதை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்தி்ப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...