போட்டோஷாப்பில் பிரஷ்கள் நாம் பயன்படுத்தி வருகின்றோம். நிறைய டிசைன்கள் சேர்ந்து ஒரே பிரஷ் பைலாக நமக்கு கிடைக்கும் நாம் போட்டோஷாப்பினை திறந்து அதில் அந்த பிரஷ் பைலினை லோட் செய்து பின்னர்தான அதில் உள்ள டிசைன்களை பார்க்க முடியும் ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் நாம் நம்மிடம் உள்ள பிரஷ் பைல்களில் வரும் டிசைன்களை எளிதில் அறிந்துகொள்ளலாம். கே.பி. அளவில் உள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்குகிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு வரும் விண்டோவில் உங்களிடம் உள்ள பிரஷ் பைலினையோ பிரஷ் போல்டரையோ தேர்வு செய்யவும்.
இதில் வலதுபுறம் உங்களுக்கு பிரஷ்களின் தம்ப்நெயில் அளவு வரும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் பிரஷ்களின் நிறமும் பின்புற நிறத்தினையும் தேர்வு செய்துகொள்ளலாம்.போல்டர்களை தேர்வு செய்யும் சமயம் அதில் உள்ள பைல்கள் கிடைக்கும்.ஒவ்வோரு பைல்களாக நர்ம் தேர்வு செய்தால் அதில் உள்ள டிசைன்கள் நமக்கு பக்கத்தில் ப்ரிவியு தெரியும்.
அதனை தம்ப்நெயில் படங்களாகவோ - ஐகான்களாகவோ எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். இதன் மூலம் நாம் நம்மிடம் உள்ள பிரஷ்களின் டிசைன்களை போடடோஷாப் துணையில்லாமல் எளிதில அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன்
வேலன்.