Showing posts with label photoshop.photoshop tricks.photoshop tips.photo.வேலன்:. Show all posts
Showing posts with label photoshop.photoshop tricks.photoshop tips.photo.வேலன்:. Show all posts

வேலன்:- ஓரே கீயில் படங்களை ஒட்ட




<span title=


நமது கீ-போர்டில் Insert Key என்று ஒன்று இருப்பதை
நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா... Delete Key க்கு மேல்புறம்
இருக்கும். இதுவரை கவனிக்கவில்லையென்றால் அது
இருக்கும் இடத்தை கவனித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இனி அந்த கீ- எதற்கு எல்லாம் நமக்கு பயன்படுகின்றது
என பார்க்கலாம்.

முதலில் வேர்டில் ஒரு டெக்ஸ்டை தட்டச்சு செய்கின்றோம்.
அதற்கு இடையில் நமக்கு வேறு ஒரு வார்த்தை வரவேண்டும்.
அப்போது நாம் வார்த்தையை சேர்க்க வேண்டிய இடத்தி்ல்
கர்சரை வைத்து பின் இந்த இன்சர்ட் கீயை அழுத்தி வேண்டிய
டெக்ஸ்டை தட்டச்சு செய்யலாம்.(இன்சர்ட் கீ-யை அழுத்தாமலே
யே அந்த இடத்தில் நாம் தட்டச்சு செய்யலாமே என நீங்கள்
கேட்பது புரிகின்றது) டெக்ஸ்ட் மீது தட்டச்சு செய்தால்
அடிக்கப்படும் டெக்ஸ்ட் ஏற்கனவே உள்ள டெக்ஸ்டுடன்
இணைக்கப்படும்.
அதே டெக்ஸ்டில் அந்த வார்த்தையை-வரிகளை எடுத்துவிட்டு
வேறு வார்த்தையை சேர்க்க என்ன செய்வோம். அதை டெலிட்
செய்துவிட்டு அந்த இடத்தில் வார்த்தைகளை தட்டச்சு செய்வோம்.
ஆனால்இந்த இன்சர்ட் கீ-டாகுல் கீயா (Toggle Key)
உள்ளதால் இந்த இன்சர்ட் கீ-யை அழுத்திவிட்டு அந்த இடத்தில்
நீங்கள் தட்டச்சு செய்தால் அந்த வார்த்தைகள் அழிக்கப்பட்டு
நீங்கள் தட்டச்சு செய்கின்ற வார்த்தைகள் வரும்.

சரி இதை நாம் வேறு எதற்கு பயன்படுத்தலாம்.
வேர்டில் டாக்குமெண்ட் தயாரிக்கையில் ஒரு
இடத்தில் உள்ள டெக்ஸ்டை கட் செய்து அதை வேறுஒரு
இடத்தில் ஒட்ட என்ன செய்கின்றோம். எந்த இடத்தில்
ஒட்ட வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரை கொண்டு
சென்று பின் Edit மெனு சென்று Paste பிரிவில் கிளிக்
செய்வோம். மற்றும் ஒரு முறையில் Ctrl+V அழுத்தி
Pasteசெய்யலாம். அல்லது மவுஸை ரைட் கிளிக்
செய்து வரும் மெனுவில் Paste பிரிவை கிளிக் செய்யலாம்.
ஆனால் Insert Key யையே நாம் Paste கீ யாகவும் பயன்
படுத்தலாம்.அதை எப்படி என்று இப்போது காணலாம்.

முதலில் வேர்ட் திறந்துகொண்டு மெனுபாரில் உள்ள
Tool கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

அதில் Options கிளிக் செய்து வரும் விண்டோவில் Edit டேபை
கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.


பல செக்பாக்ஸ் இருக்கும் அதில் வட்டம் மிட்டு காட்டியுள்ள
"Use the Ins Key for Paste"எதிரில் உள்ள ரேடியோ பட்டனை
தேர்வு செய்து ஓ.கே . கொடுங்கள்.
இனி நீங்கள் டெக்ஸ் அல்லது படத்தை பேஸ்ட் செய்ய
விரும்பினால் டெக்ஸ்ட் அல்லது படத்தை தேர்வு செய்துவிட்டு
எந்த இடத்தில்வரவேண்டுமோ அந்த இடத்தில் கர்சரைவைத்து
இந்த இன்சர்ட் கீ யை அழுத்தினால் போதும். ஒரே அழுத்தலில்
உங்கள் வேலை சுலபமாக முடிந்துவிடும்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



JUST FOR JOLLY PHOTOS:-


ஏய்....நல்லா உள்ளே வா.... கவிழ்ந்திட போறே...





இன்றைய PSD புகைப்படம் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-


இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


இதுவரை Insert Key பயன்படுத்தியவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...