நமது உடலே அருமையான தொழில்நுட்பம். உடலின் எங்காவது தடங்கள்கள் ஏற்படும் போது சில வலிகள்-சில அறிகுறிகள் மூலம் நமக்கு எச்சரிக்கைமணி அடிக்கும.டாக்டரிடம் சென்றால் உடல்சரி செய்யப்படும். அதுபோல நமது கணிணிக்கும் டாக்டர் உள்ளது.என்ன கம்யூட்டருக்கும் டாக்டரா என நீங்கள் கேட்பது புரிகின்றது.7 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள DIAGNOSE கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உங்கள் கம்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களுக்கு அதற்கான ரிப்போர்ட் கிடைக்கும்.
Repair கொடுத்தால் உங்கள் கம்யூட்டரின் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுவிடும். இது டிரையல் விஷன் ஆதலால் நன்றாக இருந்தால் நீங்கள் பணம்கொடுத்துவாங்கி பயன்படுத்துங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.