Showing posts with label thanks.blogger.vote.youthful vikatan.tamilish.thiratti.tamil 10. Show all posts
Showing posts with label thanks.blogger.vote.youthful vikatan.tamilish.thiratti.tamil 10. Show all posts

வேலன்-ஆடியோவினை கம்யுட்டரில் தொடர்ந்து பதிவு செய்ய

நாமே பாடலை பாடி நாமே நமது பாடலை கேட்பது தனி இன்பம். கம்யுட்டரிலேயே பதிவு செய்ய வசதி உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அது பதிவு ஆகும். மேற்கொண்டு பதிவு செய்ய அதை நாம் நீடிக்க வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு அந்த குறையை போக்குகின்றது. 400 கே.பி. (அதாவது 1 எம்.பி.யில் பாதி) அளவே உள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யுட்டரில் நிறுவிய பின உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேற்புறம் உங்களுக்கு Input என்கின்ற பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நீங்கள் உங்களுடைய Device தேர்வு செய்து கொண்டு பின்னர் நீங்கள் எதிலிருந்து பாடல்கள் பதிவு செய்ய போகின்றீர்களோ அதை தேர்ந்தெடுங்கள்.
அடுத்து உங்களுக்கு பாடல் எந்த பார்மெட்டில் வேண்டுமோ Output மூலம் அதனை தேர்வு செய்யுங்கள்.
இதிலுள்ள செட்டிங்ஸ் மூலம் தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள். சிடி பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது. கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
எல்லாம் தயார் செய்துவிட்டீர்களா. இப்போது இதில் உள்ள ரெகார்ட் பட்டனை அழுத்துங்கள்.ஆடியோ பதிவாகும். 
தேவையானது பதிவானதும் ஸ்டாப் பட்ட ன் மூலம் நிறுத்துங்கள். இப்போது நீங்க்ள சேமித்துள்ள போல்டரில் சென்று பார்த்தால் பாடல் ப்திவாகிஇருக்கும்.
புதியவர்களுக்கு என்று இதற்கு முன் 19-02-2009 அன்று கம்யுட்டரில் ஆடியோ பதிவு செய்ய என்கின்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன். விவரமாக அதனை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.ஆடியோ கேசட்டிலிருந்து பாடல்களை கம்யுட்டருக்கு மாற்ற என்ன செய்யவேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அந்த பதிவினை போடும் முன் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் அந்த பதிவிற்கு சுலபமாக இருக்கும் என்றே இதனை பதிவிடுகின்றேன். ஆடியோ கேசட்டிலிருந்து பாடலை கம்யுட்டருக்கு எவ்வாறு பதிவு செய்வது என்று பின்னர் பதிவிடுகின்றேன்.(புதியவர்களுக்காகவே இந்த பதிவு) பதிவினை பாருங்கள் கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை காக்க பதிவை யுத்புல் விகடனில் குட்பிளாக் பகுதியில் வெளியிட்ட விகடனாருக்கு நன்றி.நாளை ஞாயிறு கடை உண்டு. நாளை விளையாட்டை பற்றிய பதிவு .இது கொஞ்சம் பெரியவர்கள் அடிக்கடி விளையாடும் விளையாட்டு. அந்த விளையாட்டு பதிவினை காண நாளை வரை கொஞ்சம் பொருத்திருங்கள்....!
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...