
சிலர் ஒன்றே ஓன்று கண்ணே கண்ணுனு வைத்திருப்பார்கள் சிலர் இரண்டு வைத்து சமாளிப்பார்கள்.நேரமும் ஆவலும் இருப்பவர்கள் மூன்றுக்கு மேலும் வைத்திருப்பார்கள்...இருங்க இருங்க...அதற்குள் தப்பாக நினைக்காதீர்கள்.வலைப்பதிவுகளை சொன்னேன். ஒருவரே இரண்டு வலைப்பதிவுகளை எழுதும் சமயம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருக்காது. அவரின் சுயவிவரம் சென்றோ - அல்லது -அவரின மற்ற பதிவின் லிங்கை தட்டச்சு செய்தோதான் செல்லவேண்டும். அதனை தவிர்த்து நமது பதிவுகளில் ஒன்றுக்கொண்று லிங்க கொடுத்துவிட்டால் நமது பதிவினை படிக்கும் நண்பர்கள் நமது ஒரு பதிவில் இருந்து மற்றொரு பதிவிற்கு சுலபமாக செல்லலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள். அதில எனது பதிவில் திருக்கழுக்குன்றம் - வாழ்த்தலாம் வாங்க -என இரண்டு பதிவிகளின் லிங்க கொடுத்துள்ளதை கவனியுங்கள்.இனி அதை பதிவில் எப்படி கொண்டு வருவது என்று பார்க்கலாம்.
பிளாக்கில் டாஷ்போர்ட் - வடிவமைப்பு -கேஜட்டை சேர் - ஓடை என வரிசையாக தேர்வு செய்துகொள்ளுங்கள்.ஆங்கிலத்தில் முறையே Dashboard - Design-Add a gadget -Feed என தேர்வு செய்துகொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
ஓடை யை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உங்கள் வலைப்பதிவின் முகவரியை ஃபீட் URL என்பதின் எதிரில் உள்ள கட்டத்தில் தட்டச்சு செய்யவும். முகவரிக்கு அடுத்து atom.xml என தட்டச்சு செய்யவும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட வி்ண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுடைய எத்தனை பதிவுகள் வரவேண்டுமோ அந்த எண்ணிக்கையை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு அதிலேயே முன்னோட்டம் காணலாம்.
நான் 1 பதிவினை சேர்த்துள்ளேன். அதைப்போல் இணைப்புகளை புதிய சாளரத்தில் திறக்கவும் என்பதின் எதிரில் உள்ள பட்டனை தேர்வு செய்துள்ளேன். இதனால் என்ன பயன் என்றால் புதிய விண்டோவில் நமது பதிவானது திறக்கும்.
இறுதியாக சேமி கிளிக் செய்து பின் வெளியேறவும். இப்போது உங்கள் வலைப்பக்கத்தில் பார்த்தீர்களே யானால் நமது புதிய வலைப்பக்கத்தின் லிங்க அமர்நதிருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்