போட்டோஷாப் நாம் பரவலாக பயன்படுத்திவருகின்றோம். போட்டோஷாப்பில் செய்யும் வேலையில் சுமார் 80% இதில்
நாம் செய்யலாம்.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை
இதில் போட்டோக்களின் வகைகளில் சுமார் 80 விதமான பார்மெட்களை -வகைகளை இது ஆதரிக்கின்றது.அது ஆதரிக்கும் வகைகளை பாருங்கள்.
இந்த சாப்ட்வேரை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Manager,Viewer,Editorஎன டேப்புகள் இருக்கும். அதில் Manager என்பதை கிளிக் செய்யவும். இதில் இடது ஓரம் உங்கள் கம்யுட்டரின் டிரைவ லிஸ்ட் கள் இருக்கும். இதில் புகைப்படம் உள்ள டிரைவிலிருந்து போல்டரை தேர்வு செயததும் உங்களுக்கு அதில் உள்ள படஙகள் ஓப்பன் ஆகும்.படத்தினுடைய பார்மெட்டும் சேர்ந்து ஓப்பன் ஆகும்.இதில் எந்த படத்தினை நீங்கள் தேர்வு செய்கின்றீர்களோ அந்த படம் இடது மூலையின் கீழ் வரும்.
இரண்டாவதாக உள்ளது Viewer.பெரிது பண்ணி பார்க்கலாம். ஸ்லைடைஷோ கொண்டுவரலாம்.மேலும் நீங்கள் புகைப்டம் எடுத்த தேதியும் ,கேமரா ப்ளாஷ் மற்றும் கேமரா சம்பந்தமான தொழில்நுட்ப விவரங்கள் இதன் கீழே வருவதை காணலாம;.
மூன்றாவதாக இதில் Editor. போட்டோஷாப்பில் வருவது போன்று இதில் சைடில் 11 டூல்வகைகள் கொடுத்துள்ளார்கள்.கிராப்பிங்.குளோனிங். மார்பிங் என வகைவகையான டூல்கள் உள்ளது. இதில் உள்ள Droste effect கிளிக் செய்தால் நமது கர்சரானது + அம்புகுறியாக மாறிவிடும். புகைப்படத்தின் நடுவில்வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு புகைப்படம் கீழ்கண்டவாறு வரும். தேவையான மாற்றங்கள் செய்து ஓ,கே. கொடுததால் வட்ட வட்ட வடிவத்தில் புகைப்படங்கள கிடைக்கும்.
இதன் மேலே உள்ள டேபிள் பார்த்தீர்களே யானால் Effects உள்ளது. இதில் விதவிதமான டூல்கள் உளளது.
பென்சில் டிராயிங் உட்பட ஏதுவேண்டுமானாலும் டூலை தேர்வு செய்து நாம் படத்தை மாற்றிக்கொள்ளலாம்.படத்தை resize செய்யும் வசதியும் உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புகைப்படத்தில் நாம் சுலபமாக எழுத்துக்களையும் நாம் கொண்டு வரலாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமையா என நாம் கேட்பது போல இந்த சின்ன சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் இலவசமாக கிடைப்பது வியப்பை அளிக்கின்றது. பதிவின் நீளம் கருத்தில் கொண்டு இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்