இணையத்தில் விதவிதமான வீடியோ கட்டர்கள் இருந்தாலும் பயன்படுத்த எளிமையான - சுலபமான வீடியோ கட்டராக இந்த BANDICUT வீடியோ கட்டர் உள்ளது. 9 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ளஒப்பன் பைல் கிளிக் செய்து நம்மிடம் உள்ள வீடியோபைலினை தேர்வு செய்யவும்.
எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை தேவையோ அந்த இடத்தினை இதில் கீழே உள்ள ஸ்லைடரை கொண்டு தேர்வு செய்யவும்.வீடியோவில் குறிப்பிட்ட பகுதி ஒளிபரப்பாகும் துல்லியமான நேரம் தெரிந்தாலும் நாம் நேரம் மூலம் இதனை தேர்வு செய்யலாம்.
இறுதியாக இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு சில வினாடிகள் காத்திருப்பிக்கு பின் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் உள்ள பிளே பட்டனை கிளிக்செய்தால் நாம் தேர்வு செய்த வீடியோவினை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.