நாம் அனுப்பும் சில கடிதங்கள் மிக முக்கியமானது.
இ-மெயிலில் அனுப்பினாலும் நமது மெயில்
பாஸ்வேர்ட் தெரிந்தவர்கள் யாராவது அதை
படித்துவிட வாய்ப்புண்டு்
சில சமயம் நாம் கடிதம் எழுதும்போது
குறிப்பிட்டு எழுதுவோம். இந்த கடிதத்தை
படித்தவுடன் கிழித்து விடவும் என்று .
. அதனால் ரகசியத்தை
ரகசியமாக வைத்துக்கொள்ள இந்த தளம்
உதவுகின்றது. இந்த தளம் செல்ல
உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் மேற்புறம் பார்த்தீர்களேயானால் கீழ்கண்ட
விளக்கங்கள் இருக்கும்.



இனி தகவல் பக்கத்திற்கு வருவோம்.
Write your note below கீழ் உள்ள கட்டத்தில் நீங்கள்
எழுத விரும்பும் தகவலை ஆங்கிலத்தில் அல்லது
தமிழில் எழுதி முடியுங்கள்.

எழுதி முடித்துவிட்டீர்களா.. அடுத்து அதன் கீழ்
உள்ள Create Note பட்டனை அழுத்துங்கள்.
உங்களுடைய தகவல் பக்கம் மறைந்து
உங்களுக்கு கீழ் கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
அதில் உங்களுக்கு ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும்.

அது தான் உங்களுடைய தகவல் அடங்கிய லிங்க்.
இதை காப்பி செய்து உங்களுடைய நண்பருக்கு
இ-மெயிலில் அனுப்புங்கள். அல்லது எஸ்.எம்.எஸ்
அனுப்புங்கள்.
அவர்கள் அந்த தகவலின் முகவரியை
காப்பி செய்து தகவலை படித்துமுடித்துவிட்டால்
தகவல் தானே அழிந்துவிடும். இந்த தகவலை
ஒரு முறை மட்டுமே படிக்க முடியும்.
எனவே தகவல் பெறும் நபர்
அந்த தகவல் மீண்டும் தேவையென்றால்
அந்த பக்கத்ததைகாப்பி செய்து தனியே
வைத்துக்கொள்ளவேண்டும்.
வித்தியாசத்தை விரும்புவர்கள்
இதை ஒரு முறை உபயோகித்துப்பாருங்கள்.
படித்துப்பாருங்கள்.
பிடித்திருந்தால் மறக்காமல் ஒட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இதுவரை ரகசியமாக கடிதத்தை ரகசியமாக
அனுப்பியவர்கள்:-