
நான் நேற்று MP-3 கட்டர் பற்றி பதிவிட்டிருந்தேன். அதற்கு
நண்பர் கீழ்கண்டவாறு கருத்துரை கூறியிருந்தார்.
கருத்துரை கீழே:-
யூர்கன் க்ருகியர் கூறியது...
நண்பர் ஆசைபட்டுவிட்டார்...ஆசையை நிறைவேற்ற
நல்ல விடயம் சார். பகிர்வுக்கு நன்றி!
சார் .. வெவ்வேறு பாடல்கள்களின் கிளிப்களை வேண்டிய
சார் .. வெவ்வேறு பாடல்கள்களின் கிளிப்களை வேண்டிய
இடத்தில ஒன்று சேர்த்து நாமாகவே ஒரு ரி-மிக்ஸ் தயார்
பண்ற மாதிரி ஒரு சாப்ட்வேர் ஐ தேடி கொண்டிருக்கிறேன்.
இன்று MP-3 Joiner பற்றி பதிவிடுகின்றேன்.
நம்மிடம் பல எம்.பி.3 பாடல்கள் இருக்கலாம். அதில்
விருப்பமான இசை,பாடல் வரிகள் இருக்கலாம்.
சில பாடல்களில் பாடல் வரிகள் நன்றாக இருக்கும்.
சில பாடல்களில் இசை நன்றாக இருக்கும். நாம்
நமக்கு பிடித்த பாடலில் இருந்து பாடலையும்
பிடித்த இசையையும் ஒன்றாக சேர்த்து நமக்கு
விருப்பமான பாடலை உருவாக்கலாம்.அதற்கு
இந்த எம்.பி.3 ஜாயினர் உதவுகின்றது.
3 எம்.பி. கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்கு
கிளிக் செய்யுங்கள். உங்கள் கணிணியில் நிறுவிக்
கொள்ளுங்கள்.உங்களுக்கு இந்த சாப்ட்வேரை ஓப்பன்
செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோஇருக்கும்.

இதில் உள்ள Add Files -ல் உங்கள் கணிணியில் உள்ள பாடலை
தேர்வு செய்துகொள்ளலாம். இல்லை மொத்த போல்டரில் உள்ள
பாடல் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள்
Add file கிளிக் செய்து உங்கள் விருப்பமான பாடலை தேர்வு
செய்யுங்கள்.
இதைப்போல் நீங்கள் எத்தனை பாடல்களை தேர்வு செய்கின்
றீர்களோ அந்த பாடல்கள் மொத்தத்தையும் தேர்வு செய்து
கொள்ளுங்கள். இப்போது கீழ் வரிசையில் பார்த்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ இருக்கும்.

முதல் பாடலை தேர்வு செய்து பாடலை ஓட விடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பாடல் வரிகளோ அல்லது இசையோ
வரும் சமயம் இதில் உள்ள Begin கிளிக் செய்யுங்கள். பாடல்
ஓடிக்கொண்டிருக்கும். நீங்கள் விரும்பிய பாடல்வரியோ -
இசையோ முடிந்ததும் இதில் உள்ள End கிளிக் செய்யுங்கள்.
இதைப்போல் இதில் உள்ள மொத்தப்பாடல் வரிகளையும்
தேர்வு செய்து முடித்ததும் இதில் உள்ள Join கிளிக் செய்யுங்கள்.

இதில் நாம் பாடலின் Format மாற்றிக்கொள்ளலாம். அதைப்
பேர்ல மேல்புறம் உள்ள UP Arrow -Down Arrow கிளிக் செய்வது
மூலம் பாடலை இடம்மாற்றம் செய்யலாம். அதைப்போல்
பாடலில் உள்ள Remove கிளிக் செய்வது மூலம் பாடலை நீக்கி
விடலாம். இதில் Skin கலர் மாற்றும் வசதி உள்ளது. கீழே
உள்ள படத்தை பாருங்கள்.

நீங்கள் விருப்பிய வாறு செய்து முடித்ததும் உங்கள் பாடலை
நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பிய பெயர் கொடுத்து சேமித்து
வைத்து வேண்டிய சமயம் கேட்டு மகிழவும்.
முக்கிய விஷயம் இது டிரையல் விஷன் தான்.
பிடித்திருந்தால் வாங்கி உபயோகியுங்கள். பிடிக்காவிட்டால்
மறக்காமல் ஒட்டுப்போடுங்கள்.
சற்றுமுன் கிடைத்த தகவல்:- நண்பர் அவர்கள் இந்த
சாப்ட்வேருக்கான சீரியல் எண் தந்துள்ளார். அவரின் தளம்
செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இதுவரை பாடலை ஓன்று சேர்த்தவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்