Showing posts with label velan.ladybug.cockroach.software.வேலன்.முட்டைபூச்சி.கரப்பான் பூச்சி.ஈக்கள்.சாப்ட்வேர்.. Show all posts
Showing posts with label velan.ladybug.cockroach.software.வேலன்.முட்டைபூச்சி.கரப்பான் பூச்சி.ஈக்கள்.சாப்ட்வேர்.. Show all posts

வேலன்:-ஈக்கள்.மூட்டைபூச்சி மற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க


வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே ஈக்கள்தொல்லை ஆரம்பித்துவிடும.அதுவும் ஆடி மாதம் என்றால் ஈயை பற்றி சொல்லவே வேண்டாம். இந்த சாப்ட்வேரில்நாம் நமது கம்யூட்டர் மானிட்டரில் ஈக்களை கொண்டுவரலாம்.இதனை பதிவிற்க்கம் செய்தவுடன் 5  ஈக்களாக ஒவ்வொரு கிளிக்குக்கும் வரஆரம்பிக்கும.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வீட்டிற்கு விருந்தினர் குழந்தைவந்திருந்தான். சாப்பிட்டு கை கழுவாமல் கம்யூட்டரில் விளையாடினால் இவ்வாறுதான் மானிட்டரின் உள்ளே ஈக்கள் மொய்கும் என்று சொன்னேன். உடனே ஹிட் எடுத்துவந்துவிட்டான்.ஈ மருந்து அடித்து ஈக்களை விரட்டபோகின்றானாம்...
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
------------------------------------------------------------------------------------------------------------
முன்பெல்லாம் தியேட்டருக்கு படம்பார்க்கசென்றால் நம்முடன் முட்டைபூச்சியும் உடன் வந்துவிடும். நாம் உஷாராக இல்லையென்றால் வீடு முழுவதும் பரவிவிடும். நாம் நமது கம்யூட்டரில் அதுபோல் மூட்டை பூச்சியை வரவழைக்கலாம்.  இதனை பதிவிறக்கம் செய்ததும் நமது டாக்ஸ்பாரில் அதனுடைய ஐகான் வந்து அமர்ந்துகொள்ளும். நமக்கு 5 மடங்குகளில் ஒவ்வொரு கிளிக்க்கும் வரஆரம்பிக்கும. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதனுடைய ஐ கானினை நாம் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வேண்டிய செட்டிங்ஸ் நாம் செய்துகொள்ளலாம்.
பயன்படுத்திபாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
------------------------------------------------------------------------------------------------------------
இதைப்போல எனது முந்தைய கரப்பான்பூச்சியைப்பற்றிய பதிவு
கரப்பான்பூச்சிக்கு பயப்படாதவர்கள் இருப்பார்களா...
இன்றைய பதிவில் கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை
வரவழைப்பதை காணலாம். இந்த கரப்பான்பூச்சி 2 எம்.பி.க்குள்
தான் உள்ள சின்ன சாப்ட்வேர். இதை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கிளிக் செய்தபின்
உங்கள் கம்ப்யூட்டரில் கரப்பான் பூச்சி குறுக்கும்
நெடுக்கும் ஒடுவதை காணுங்கள்.எனது மகனுக்கு சின்ன வயதில் இந்த சாப்ட்வேரை போட்டு
நீ கம்யூட்டரில் ஏதாவது செய்தால் இந்த மாதிரி கரப்பான்பூச்சி
வரும்டா என சொன்னேன். குடுகுடு என ஓடியவன் ஒரு
கட்டையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். கொஞ்சம்
நான் கவனிக்காமல் விட்டிருந்தால் அவ்வளவுதான். மானிட்டர்
காலியாகி இருக்கும்.இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால்
உங்கள் மகனோ -மகளோ இதுபோல் நீங்கள் இல்லாதபோது
கட்டையை எடுத்துவந்து மானிட்டரில் உள்ள கரப்பான் பூச்சியை அடிக்கபோகின்றார்கள்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
மேற்கண்ட மூன்று சாப்ட்வேர்களையும் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...