
நாம் இதற்கு முன் D.V.D. Cutter உபயோகிப்பது பற்றி பார்த்தோம்.
அந்த பதிவைஇதுவரை பார்க்காதவர்கள் இங்கு கிளிக்
செய்யவும். இப்போது MP-3 Cutter பற்றி பார்ப்போம்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
செய்யவும்.இதை கணிணியில் இன்ஸ்டால் செய்யவும்.
இந்த சாப்ட்வேரை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் உள்ள ஓப்பன் கிளிக் செய்து நீங்கள் கட்செய்யவிரும்பும்
பாடலை தேர்ந்தேடுங்கள்.பாடலை பிளே செய்யுங்கள்.
பாடல் ஓட ஆரம்பிக்கும்.இதில் உள்ள ஸ்லைடரும் நகர
ஆரம்பிக்கும். படத்தை பாருங்கள்.

நீங்கள் விரும்பும் பாடல்வரி வந்ததும் அதில் உள்ள SetStart
கிளிக்செய்யுங்கள்.இப்போது ஸ்லைடர் ஆனது நீலக்கலருடன்
நகர ஆரம்பிக்கும்.

உங்களுக்கு தேவையான வரிகள் ஒலித்து முடித்ததும் இதில்
உள்ள Set End கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் எவ்வளவு நீளத்திற்கு பாடலை பதிவு செய்துள்ளீர்களோ
அதன்விவரமும் பாடல் ஒலிக்கும் நேரமும் காண்பிக்கும்.

இதில் உள்ள Play Selection கிளிக் செய்து ஒரு முறை கட் செய்த
பாடலைகேட்டுப்பாருங்கள். மாற்றங்கள் ஏதும் இருப்பின் செய்துவிட்டு
மீண்டும் ஒரு முறை பாடலை கேட்டுப்பாருங்கள.
இறுதியாக பாடலை Save Selection கிளிக்செய்து உங்கள்
விருப்பமான டிரைவில் சேமிக்கவும்.

உங்களுக்கு மேற்கண்ட விண்டோ தோன்றும். ஓ.கே.கொடுங்கள்.
அவ்வளவு தான். இந்த பாடலை நீங்கள் உங்கள் விருப்பபடி
செல்போனில் ரிங் டோனாகவோ - மெசேஜ் டோனாகவோ
வைத்துக்கொள்ளலாம்.
பதிவை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல்
ஒட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்:,
வேலன்.