
கம்யூட்டரில் பணிபுரிகையில் தகவல் -படங்கள் - குறிப்புகளை ஒரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற காப்பி - பேஸ்ட் செய்வோம். மற்ற இடங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த வசதி -வேர்ட்டில் பலமுறை பயன்படுத்தலாம். வேர்டில் 24 முறை காப்பி செய்ததில் வேண்டியதை தேர்வு செய்துபின் பேஸ்ட் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு Pasteஎன்பதின் கீழே Clipboad என்கின்ற சின்ன அம்புகுறி இருக்கும். அதை கிளிக செய்யுங்கள்.
வரும் விண்டோவில் பார்த்தீர்களேயானல் உங்களுக்கு நீங்கள் இதுவரை காப்பி செய்தவை வரிசையாக இருக்கும். தேவையானதை தேர்வு செய்துகிளிக் செய்தால் உங்கள் கர்சர் எங்கு உள்ளதோ அங்கு பேஸ்ட் ஆகும்
இதில் உள்ள 24 முறை காப்பி செய்ததகவல்களை மாறி மாறி பேஸ்ட் செய்யலாம்.ஒரே தகவலை பல நபர்களுக்கு அனுப்ப இந்த கிளிக் போர்ட்வசதி உங்களுக்கு பயன்படும்.இந்த கிளிப் போர்டினை தேவையானால் வைத்துக்கொள்ளவும் தேவையான இடங்களுக்கு நகர்த்தியும் வைத்துக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- போட்டோஷாப்பில மிக முக்கியமான 3D படம் பற்றிய பதிவை திங்கள்கிழமை காலை பதிவிடுகின்றேன்.அதற்கு உங்களுக்கு 3 D கண்ணாடி அவசியம் வேண்டும். ஏற்கனவே இதை ஆனந்தவிகடன் புத்தகத்துடனும் ஜெயா டிவியிலும் கொடுத்தார்கள்.பழைய கண்ணாடி இருந்தால் சரி. இல்லாதவர்கள் இங்கு கிளிக் செய்து அந்த பதிவினை பார்த்து புதியதாக செய்துகொள்ளுங்கள்.பதிவின் லிங்க் கொடுததமைக்கு கொக்கரக்கோ நண்பர் பிரேம் அவரகளுக்கு நன்றி.