Showing posts with label velan.photoshop .paper weight. Show all posts
Showing posts with label velan.photoshop .paper weight. Show all posts

வேலன்-போட்டோஷாப் - பேப்பர் வெயிட்டில் புகைப்படங்கள் வரவழைக்க

சாராண பேப்பர் வெயிட் பார்த்திருப்போம். ஒரு மாறுதலுக்கு கியுப்பில் நமது புகைப்படங்களை ஒட்டி அழகான பேப்பர் வெயிட்டாக வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கு்ம். இதற்காக நாம் மெனக்கெட்டு ஒவ்வொரு போட்டோவாக கட்செய்து ஒட்ட வேண்டாம். போட்டோஷாப்பில் நாம் தேவையான புகைப்படங்கள் கொடுத்தால் போதும். அதுவே அழகாக பாக்ஸ் அளவிற்கு நமக்கு மாற்றி தந்துவிடும். அந்த Action-ஐ பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் தேவையான 5 புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் நம் சக பதிவர்களான திரு.முனைவர் குணசீலன்.திரு.சபீர்.திரு.ஜெய்லானி(அவர் புகைப்படம் கிடைக்காததால் அவரின் பெவரைட் பச்சை ரோஜா படம் எடுததுள்ளேன்) திரு.ஞானசேகரன்,மற்றும் திரு.ப்ரியமுடன் வசந்த்.
ஒவ்வொரு படங்களும் 747 x 747 பிக்ஸல் அளவிலும் ரெசுலேஷன் 300 பிக்ஸல் அளவிலும் கிராப் டூல் மூலம் கட் செய்து தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் தேர்வு செய்த படங்கள் கீழே-











இப்போது Action Box Open செய்து அதில் இந்த Paper Cube  ஐ கொண்டுவந்துவிடுங்கள். இதை பற்றி முந்தைய பதிவுகளில் விரிவாக போட்டுள்ளேன் புதியவர்கள் இங்கு சென்று பார்த்துக்கொள்ளவும்..இப்போது உங்களுக்கு Action Paper Cube  இந்த மாதிரி வந்துவிடும். இப்போது அதில் உள்ள 5 images  என்பதை கிளிக்செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு படங்களை தேர்வு செய்ய சொல்லும் . நீங்கள் முதல் படத்தை தேர்வு செய்யுங்கள். நான் தேர்வு செய்த படம் கீழே-
இப்போது Continue கொடுத்து அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யுங்கள். சில நிமிடங்களுக்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ தோன்றும்.
இதை A4 போட்டோ பேப்பரிலோ - சாதாரண பேப்பரில் எடுத்து கனமான அட்டையில் ஒட்டிக்கொள்ளுங்கள. இதில் படம் உள்ள இடம் தவிர காலியாக உள்ள இடங்களை வெட்டி எடுத்துவிடுங்கள். பின்னர் படம் தவிர்த்து ஓரங்களை மடித்துக்கொள்ளுங்கள். நல்ல ஒட்டும் பசையை எடுத்து அதில் உள்ளவாறு ஒவ்வொன்றாக ஒட்டுங்கள். அவ்வளவுதான் பேப்பர் வெயிட் அழகான படங்களுடன் ரெடி.
இதே படத்தினை ஒரே போட்டோவின் மூலமும் செய்யலாம். அனைத்துப்பக்கங்களிலும் ஒரே போட்டோ வரும்.குழந்தைகள் போட்டோ போடும் சமயம் மிக அழகாக இருக்கும். 
சக பதிவரின் குழந்தை படம் கீழே-
இதை போட்டோ பாக்ஸில் கொண்டுவந்தபின் வந்த படம் கீழே-
நாளை விடுமுறைதானே..அழகான புகைப்படங்களை இதுபோல் செய்து பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
செய்து பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...