மழை - மேகம் - இடி- மின்னல் - இயற்கையின்அழகே அழகு.போட்டோஷாப்பில் இவை அனைத்தையும் அருமையாக கொண்டு வரலாம். ஏற்கனவே முந்தைய பதிவுகளில் மழை - இடி-மின்னல் என பிரஷ் டூல்கள் பற்றி பதிவிட்டுள்ளேன். அந்த வரிசையில் இன்று மேகங்கள் பிரஷ் டூல் பற்றி பதிவிடுகின்றேன்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த பிரஷ் டூலில் என்னற்ற மேங்களின் பிரஷ் டூல் படங்கள் உள்ளது. ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திவந்ததை போல இந்த டூலையும் உங்கள் போட்டோஷாப்பில இணைத்துக்கொள்ளவும். கீழே உதாரணங்களுடன் புகைப்படங்கள் கொடுத்துள்ளேன்.
திருச்செந்துர் முருகன் கோயில்-
வெண்மைநிற மேகங்களின் பிரஷ் டூல் உபயோகித்தப்பின் வந்த படம் கீழே-கருமை நிற மேங்கள் உபயோகித்தப்பின் வந்த படம் கீழே-
சாதாரண கடற்கரை-
கருமை மேங்கள் புடைசூழ கொண்டுவந்த புகைப்படம் கீழே-இதில் 4 புகைப்படங்கள் இணைத்துள்ளேன். இதில எது எது ஒரிஜினல்படம் - எது எது பிரஷ் டூல் கொண்டு வரைந்த படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
பிரஷ டூலின் நிறத்தை வேண்டிய கலரில் இடத்திற்கு தகுந்தவாறு கொண்டுவந்துவிடுங்கள். பெறும்பாலும் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தையே உபயோகியுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்