2 in 1 பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் வால்பேப்பராகவும் அதே படம் ஸ்கிரீன் சேவராகவும் இருப்பதை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா.. சிறுவர்கள் விரும்பும் ரயில் வண்டி ஸ்கிரீன் சேவரை கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள்.
ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 75 ஸ்கிரின் சேவர்கள் இந்த தளத்தில உள்ளது. அந்த தளம் காண இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பெரும்பாலான படங்கள் வால்பேப்பராகவும் அதே படம் ஸ்கிரீன் சேவராகவும் உள்ளது. கண்ணை கவரும் படங்களோ மிக அருமை. 5 எம்.பி.யிலிருந்து 40 எம்.பி வரை ஒவ்வொரு படமும் வித்தியாசமான அளவினில் உள்ளது். உங்களுக்கு எது விருப்பமோ அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.எனக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் அல்லவா? அதனால் தான் மொத்த படங்களின் லிங்க் கொடுத்துவிட்டேன்.தேவையானதை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மாடலுக்கு சில படங்கள் கீழே-
அருவி நீர்விழ்ச்சியுடன் வரு்ம் படம் கீழே- வண்ண மீன்கள் அணிவகுப்பு-
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- நமது பதிவிலேயே முழு கவனம் செலுத்தியதால் திருக்கழுக்குன்றம் பதிவில்கவனம் செலுத்த முடியவில்லை.
நேற்று இரவு (25-10-2010 )கடும் மழை - பயங்கர மின்னல் -
அதிரவைக்கும் இடி சத்தம். இந்திரனின் இடி பூஜை இனிதே முடிந்தது.அதே சமயம் பளிச்சின்னு எனது மனதினில் ஒரு மின்னல்.என்ன ஆச்சுன்னு தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.