Showing posts with label velan.secure folder..வேலன்.போல்டர்.. Show all posts
Showing posts with label velan.secure folder..வேலன்.போல்டர்.. Show all posts

வேலன்:-போல்டர்களை ரகசியமாக மறைதது வைக்க

வேலன்-போல்டர்களை ரகசியமாக மறைத்துவைக்க
ரகசியம் யாருக்குதான் இருக்காது..ரகசியத்தை ரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விவரங்களை வைத்திருப்பார்கள்.கணக்குவிவரம்-தொலைபேசி எண்கள்-பாஸ்வேர்ட்கள்-புகைப்படங்கள் என ரகசியங்கள் பலவகைகளில் இருக்கும். அதை எலலாம் மொத்தமாக ஒரு போல்டரில் போட்டு அந்த போல்டரை தனியே மறைததுவிடலாம். 400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. இதில் உங்களுடைய பர்சனல் பாஸ்வேர்ட் ஏதாவது தட்டச்சு செய்யுங்கள். உடன் உங்கள் இ-மெயில முகவரி மற்றும் பாஸ்வேர்டினை நினைவுகொள்ளும் குறிப்புகளையும் தட்டச்சு செய்யுங்கள.
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ADD பட்டனை கிளிக் செய்தோ - போல்டரை இழுத்துவந்தோ இந்த விண்டோவின் உள்ளே விட்டுவிடுங்கள். இதில் உள்ள Secure கிளிக் செய்துவிடுங்கள்.உங்கள் போல்டரானது மறைந்துவிடுவதை கவனியுங்கள்.
 இப்போது உங்களுக்கு மீண்டும் உங்களுடைய போல்டர் தேவையென்றால் இந்த சாப்ட்வேரினை கிளிக்செய்யுங்கள் மீண்டும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் பர்சனல் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யுங்கள..வரும் விண்டோவில் நீங்கள் எந்த போல்டரை பார்க்க விரும்புகின்றீர்களோ அந்த போல்டரை தேர்வு செய்து Unsecure செய்துவிடுங்கள். இப்போது உங்கள் டிரைவில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களது போல்டர் இருக்கும்.இதில் நிறைய போல்டர்கள்போடும் வசதிஉள்ளதால் நீங்கள் எதை எதை மறைக்க விரும்புகின்றீர்களோ அதைஎல்லாம் இதில போட்டு மறைத்துவிடுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...