Showing posts with label velan.tamil.tamil grammer.தமிழ்.வேலன்.தமிழ் இலக்கணம்.யாப்பு மென்பொருள்.. Show all posts
Showing posts with label velan.tamil.tamil grammer.தமிழ்.வேலன்.தமிழ் இலக்கணம்.யாப்பு மென்பொருள்.. Show all posts

வேலன்:-தமிழ் இலக்கணம் எளிதில் அறிய

நான் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழியைப்போல இனிய மொழி எங்கும் கண்டதில்லை என பாரதியார் கூறினார்.அந்த பெருமைமிக்க தமிழ்மொழியின இலக்கணத்தை எளிதில்அறியும் முறையை இன்று காணலாம்.இந்த தளம் செல்ல நீங்கள் இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில நீங்கள் எழுதிய அல்லது இலக்கணம் அறிய விரும்பும் செய்யுளை உள்ளீடு செய்யவும். உள்ளீடு செய்யும் சமயம் எழுத்துபிழை இல்லாமல் உள்ளீடு செய்யவும்.நான் திருக்குறளை உள்ளீடு செய்துள்ளேன்
இதில் முதலில் உள்ள எழுத்தில் கிளிக் செய்ய இதில் உள்ள உயிர் எழுத்து -மெய்எழுத்து-உயிர்மெய் எழுத்து-ஆயுத எழுத்து எவ்வளவு உள்ளது என தெரியவரும். அடுத்துள்ள அசை சீர் அறிந்துகொள்ளலாம்.
அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய இதில் உளள தளைகளை அறிந்துகொள்ளலாம்.
 அடுத்துள்ள டேபினை கிளிக் செய்ய இதில் உள்ள அடியை அறிந்துகொள்ளலாம்.
இதில் உள்ள மோனைஅறிந்துகொள்ளலாம்.
இறுதியாக இதில் உள்ள எதுகையை அறிந்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி எளிய முறையில் இலக்கணம் அறிந்துகொள்ளலாம்.மேலும் இதனை உருவாக்கியவர் திரு.virtualvinodh-இந்தியாவில் -தமிழ்நாட்டில்-சென்னையில் உள்ளவர்.அவருக்கு நமது சார்பாக பாரட்டுதல்களும் நன்றிகளும்.ஆசிரியர் தினத்திற்கு தமிழ் ஆசிரியர்களுக்கும் நமது பதிவுலக ஆசிரியர்களுக்கும் இந்த பதிவினை சமர்ப்பிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...