Showing posts with label velan.velang.just dial. Show all posts
Showing posts with label velan.velang.just dial. Show all posts

வேலன்:-தேவைகளை சுலபமாக தேட


நாம் அனைவருக்கும்புதியதாக ஒரு பொருள் -மெஷின்-

தளவாடங்கள்-மூலப்பொருள்கள் தேவைப்படலாம்.
ஒரு குண்டுசி வாங்குவதானாலும் நாலு இடத்தில் விசாரித்து
நமக்கு கட்டுப்படியாகும் விலையில் - இடத்தில் வாங்குவதே
நல்லது.ஆனால் அது எங்கு கிடைக்கும்-முகவரி என்ன - நமது
இருப்பிடத்திற்கு அருகாமையில் எந்த நிறுவனம் உள்ளது
என விவரங்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அந்த குறைகளை இந்த தளம் நிறைவு செய்கின்றது.

நீங்கள் இணைய இணைப்பில் விவரங்கள் தேட
இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் முதலில்உள்ள நகரத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
அடுத்துள்ள கட்டத்தில் நிறுவன பெயர் அல்லது பொருளின்
பெயர் கொடுத்து அடுத்துள்ள கட்டத்தில் குறிப்பிட்ட நகரத்தில்
உள்ள ஊரின் பெயர் - என குறிப்பிட்டு Go கிளிக் செய்தால்
உங்களுக்கு வேண்டிய விவரங்கள் - முகவரியுடன்-
கிடைக்கும்.

சரி இணைய இணைப்பு இல்லை.அப்போது என்ன செய்வது.
நீங்கள் 044-264 44 444 என்ற எண்ணுக்கு போன் செய்து
உங்களுடைய பெயர் - செல்போன் எண் கொடுத்து -
உங்களுக்கு என்ன தேவை என சொல்லி போனை வைத்ததும்
உங்கள் செல்போனுக்கு முகவரியுடன் sms வரும்.
நீங்கள் ஒரு தயாரிப்பாளர் - உங்கள் பொருட்களை இதுபோல்
விற்கவேண்டும்.அவர்களிடமே உங்கள் பொருட்களைபற்றி
சொல்லிவிட்டு முகவரி - போன் நம்பர் -கொடுத்துவிட்டால்
நமது பொருட்களை பற்றி யாராவது கேட்கும் சமயம் அவர்களுக்கு
நமது பொருட்களை பற்றி கூறுவார்கள்.நமது வியாபாரம்
மேலும் விரிவடையும்.

புதியதாக தொழில் தொடங்கபவர்களுக்கு இந்த தளம் -
தொலைபேசி எண் - மிகவும் பயன்படும் என எண்ணுகின்றேன்.

சமீபத்தில்தான் இந்த தளம் பற்றி அறிந்தேன்.என்னுடைய
தொழிலுக்கு தேவையான விவரங்கள் அவர்களிடம்
கேட்டேன்.விவரங்கள் தந்தார்கள்.அவர்களின்
சேவைகளும் நன்றாக இருக்கின்றது. நமது வாசகர்களும்
அறியவே இதை பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இதுவரை புதிய பொருட்களின் விவரம் அறிந்துகொண்டவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...