மை டாக்குமெண்டில் இடம் பெறும் மை பிக்ஸர். மை ஸ்கேன்.மை மியுசிக்.டவுண்லோடு என அனைத்து பைல்களும் டிரைவ் சியிலேயே அமர்ந்திருக்கும். ஏதாவது ஒரு காரணத்தினால் நாம் சி -டிரைவை பார்மெட் செய்யும் சமயம் அனைத்து தகவல்களும் அழிந்து போகும். பார்மெட் பண்ணும் முன் அதனை கவனமாக வேறு டிரைவில் காப்பி செய்து வைக்க வேண்டும். ஆனால் மை டாக்குமெண்டை நிரந்தரமாக நாம் விரும்பும் டிரைவில் சேமித்து வைத்துவிட்டால் சி- டிரைவ் பார்மெட் செய்தாலும் நமக்கு கவலையில்லை.
அதை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.முதலில் மை டாக்குமெண்டில் ரைட் கிளிக் செய்து பிராபர்டீஸ் கிளிக் செய்யுங்கள் .உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள டார்கெட் டேபை கிளிக் செய்து அதில் உள்ள ஃபைன்ட் டார்கெட் தேர்வு செய்யவும். உங்களுக்கு ஓப்பன ஆகும் விண்டோவில் நீங்கள் சேமிக்க விரும்பும் நீங்கள் விரும்பும் டிரைவினை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவினில பாருங்கள்.வழக்கப்படி மூவ் - அப்ளை - ஓ.கே. கொடுத்துவிடுங்கள். அவ்வளவுதாங்க. உங்கள் மை டாக்குமெண்டானது பத்திரமாக நீங்கள் சேமித்து வைத்துள்ள டிரைவில் அமரந்துகொள்ளும். நீங்கள் சேமிக்கும் பிற பைல்களும் அதில் சென்று சேமிப்பாகும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
நன்றி - நட்புடன் ஜமால். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்