Showing posts with label video.velan.audio.youtube..வேலன்.வீடியோ.ஆடியோ.திரைப்படங்கள்.குழந்தைகள்.. Show all posts
Showing posts with label video.velan.audio.youtube..வேலன்.வீடியோ.ஆடியோ.திரைப்படங்கள்.குழந்தைகள்.. Show all posts

வேலன்:-வித்தியாசமான யூடியூப் வீடியோ டவுண்லோடர்.

சாதாரண யூடியூப் டவுண்லோடர் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நவீன வசதிகளுடன் இந்த யூடியூப் டவுண்லோடர் உள்ளது.அதிகம்பேரால் பார்க்கப்பட்ட வீடியோக்கள்.பகிரப்பட்ட வீடியோக்கள்.என அதிக வசதிகளுடன் இந்த யூடியூப் டவுண்லோடர்  உள்ளது. 11 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் பார்க்கவிரும்பும் வீடியோவின் யூஆர்எல் காப்பிசெய்து இதில் உள்ள டவுண்லோடு லிங்க்கில் பேஸ்ட் செய்யவும்.இதில் டவுண்லோடின் வீடியோ தரத்தினை நாம் நிர்ணயித்துக்கொள்ளலாம். அதுபோல நாம் எந்த பார்மெட்டுக்கு வீடியோவினை பதிவிறக்கம் வேண்டுமோ அந்த பார்மெட்டினையும்முடிவுசெய்துகொள்ளலாம்.இதில் 20க்கும் மேற்பட்ட வீடியோ பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். அதுபோல ஆடியொவிற்கும் விதவிதமான பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். இதுதவிர 20 வகையான டிவைஸ்களின் மாடல்கள் கொடுத்துள்ளார்கள். அதற்கேற்பவும் நாம்விடியோவினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 மேலும் இதில் உள்ள சர்ச் கிளிக் செய்திடவரும் விண்டோவில்  நாம் விரும்பும் தலைப்பினை தட்டச்சு செய்யவேண்டும். வீடியோ விரும்பிய அளவில் எதுவேண்டுமோ அதனை தேர்வு செய்திட இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



 இதில் உள்ள யூடியூப் கிளிக் செய்திட வரும் விண்டோவில் இன்றைக்கு பிரபலான வீடியோ.அதிகம் பேரால் பகிர்ந்துகொண்ட வீடியோ.அதிகம்பேரால் பார்வையிடபட்ட வீடியோ.என எந்த கேட்டகிரியில் ;உங்களுக்கு வேண்டுமொ அதனை தேர்வு செய்து பார்வையிடலாம். அதுமட்டுமல்லாது மொத்த கேட்டகிரியில் உள்ள வீடியோக்களையும் நாம் சுலபமாக பார்வையிடலாம்.
 அவர்கள்கொடுத்துள்ள விவரங்களை கீழே பாருங்கள்.
இதில் நாம் ஒப்பன் செய்ததும் நமது டெக்ஸ்டாப்பில் இதற்கான ஐகான் ஒன்று அம்புகுறியில் உங்களுக்கு தெரியும்.நாம் விரும்பும் வீடியோவினை நாம் இழுத்துவந்து இதில் விட்டால் நமக்கான வீடியொ பதிவிறக்கம் ஆகும். மேலும் நாம் இதனை புக்மார்க்காக வைத்துக்கொண்டும் நமக்கான வீடியோவினை சுலபமாக பதிவிறக்கலாம். கீழே உள்ள விண்டோவில்
 பாருங்கள்.



பயன்படுத்த சுலபமாகவும் பதிவிறக்கம் செய்யும் சமயமே நாம் விரும்பும் பார்மெட்டில் பதிவிறக்கம் செய்திடவும் வசதிஉள்ளதால் இது அனைவராலும் விரும்பப்படும் என்பதில் சந்தேகமில்லை. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...