
இருக்கும் சமயம் கணிணி ஆனது தானே
ஸ்கிரீன் சேவர் ஆன் ஆகி அவர்கள் வைத்துள்ள
படம் வரும். ஆனால் அதில் நமது படம் வந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும். நமது படத்தை எப்படி
ஸ்கிரீன் சேவராக கொண்டு வருவது என
பார்க்கலாம். முதலில் My Documents-My Picture-ல்
நீங்கள் ஸ்கிரீன் சேவராக வரவழைக்கும்
படம் ஒன்றோ இல்லை அதற்கு அதிகமாகவோ
கொண்டுவந்து வைத்துவிடுங்கள். அடுத்து
டெக்ஸ்டாப்பில் கர்சரை வைத்து ரைட்
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ளProperties கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Screen Sever -ஐ கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அடுத்து Screen Sever என்பதன் கீழ் உள்ள
டிராப் டவுண் லிஸ்ட் கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள My Picture Slide Show கிளிக்
செய்யுங்கள்.அதில் நீங்கள் தேர்வு செய்த
படங்கள் தேர்வாகும். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.

அடுத்து உள்ள Settings -ஐ கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள அளவுகளை உங்கள் விருப்பம்போல்
தேர்வு செய்யுங்கள். இறுதியாக ஓகே கொடுங்கள்.
உங்கள் கணிணியில் ஸ்கிரீன் சேவர் எவ்வளவு
நிமிட காத்திருத்தலுக்கு பின் வர வேண்டும்
என்பதை செட் செய்யுங்கள்.
இதில் உள்ள Preview பார்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக Apply - Ok கொடுங்கள்.
இனி உங்கள் கணிணியின் ஸ்கிரீன் சேவரில்
நீங்கள் தேர்வு செய்த படம் அழகாக வருவதை
காண்பீர்கள்.
பதிவுகளை பாருங்கள். பிடித்திருந்தால்
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்:,
வேலன்.
இதுவரையில் கணிணியில் ஸ்கிரீன்சேவரை
மாற்றியவர்கள்:-