Showing posts with label windows xp.vista.cd.cd player.விண்டோஸ் எக்ஸ்பி.விண்டோ.வேலன்.velan.Damage CD-பழுதான சிடி Damage Cd.recover cd. Show all posts
Showing posts with label windows xp.vista.cd.cd player.விண்டோஸ் எக்ஸ்பி.விண்டோ.வேலன்.velan.Damage CD-பழுதான சிடி Damage Cd.recover cd. Show all posts

வேலன்:-Damage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற

நாம் காப்பி செய்யும் சிடிகளில்  அந்த சிடியில் உள்ள தகவல்களை எழுதிவைப்போம். சில சமயம் எழுத மறந்துவிடுவோம்.சில நாட்கள் கழித்து சிடியை எடுத்து பார்க்கும் சமயம் டேமேஜ் (Damage) ஆகியிருக்கும்.எதில்போட்டாலும் சிடி ஓப்பன் ஆகாது. அதில் என்ன தகவல் உள்ளது என்பதும் நமக்கு தெரியாது. அந்த சிடியை வைத்துக்கொள்வதாக இல்லை குப்பையில் போட்டுவிடுவதா என குழப்பமாகும். குப்பையில போடும் முன்பு அதை செக்செய்து போடுவது நல்லது. சிலசமயம் அதில முக்கியமான தகவல்கள் இருக்க்கூடும். அதை சிடி டிரைவில போட்டால் ஒப்பன் ஆகாது. அந்த மாதிரியான சமயத்தில் நமக்கு கை கொடுக்க வருவது இந்த சாப்ட்வேர். உயிருக்கு போராடுபவருக்கு பெரிய டாக்டர் கடைசியாக முயற்சிசெய்வதில்லையா. அதுபோல் இந்த சாப்ட்வேர் மூலம் கடைசியாக முயற்சிசெய்து இதில உள்ள தகவல்களை மீட்டு எடுக்கலாம். இதிலும் தகவலை எடுக்க முடியாவிட்டால் அவ்வளவுதான்.மனதை தேற்றிக்கொண்டு சிடியை தூக்கி போட்டுவிடுங்கள்.இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்கள் கணிணியில் இன்ஸ்டால்செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இப்போது உங்களுக்கு சிடியை டிரைவில் போடசொல்லி தகவல் வரும் கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இப்போது சிடி டிரைவில் சிடியை போட்டு ஓ.கே.தாருங்கள். இப்போது மெயின் விண்டோவில் உள்ள சிடி ஐகானை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நெக்ஸ்ட் கொடுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில நீங்கள் சேமிக்க விரும்பம் போல்டரை தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். அதில பைல்கள் சிடியிலிருந்து டிரைவின் போல்டருக்கு காப்பி ஆகும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.
இறுதியாக பைல்கள் காப்பி ஆகிவிட்டதை காணலாம்.இதுதவிர்த்து நீங்கள் சிடியில ஒரே ஓரு பைலை மட்டும் காப்பி செய்வதானாலும் காப்பி செய்யலாம். மெயின்விண்டோவில் இரண்டாவதாக உள்ள ஐ –கானை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
எந்த பைல்வேண்டுமோ அதை மட்டும் தேர்வு செய்து அதைமட்டும் வேண்டிய போல்டரில புதியதாக பெயர் கொடுத்து காப்பி செய்யலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
.
சிறிது நேரம் கழித்து  நீங்கள் காப்பி செய்த போல்டரில் பார்த்தால் உங்கள் சிடியில் உள்ள தகவலானது ஜம்முனு அங்கு அமர்ந்திருக்கும். பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...