வீடியோ பைல்களை நாம் விருப்பபடி எடிட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதில் Clip.Crop.Effect.Subtitle.Watermark என வித்தியாசமான 5 ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். 32 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் எடிட் செய்ய விரும்பும் வீடியோ பைலினை தேர்வு செய்யவும். இப்போது இதில் உள்ள ப்ரிவியூவில் உங்களுக்கான வீடியோ ஓடஆரம்பிக்கும். இப்போது கீழே வலதுபுறம் விண்டோவில் உங்களுக்கு Clip,Edit.Effects.Subtitle&Watermark என ஐந்துவித ஆப்ஷன்கள் இருப்பதனை கீழே உள்ள விண்டோவில பர்ருங்கள்.இதில் உள்ள கிளிப் தேர்வு செய்ய வீடியோவில் உங்களுக்கு குறிப்பிட்ட பகுதி எது வேண்டுமோ அதுவரை தனியே கட் செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு திரைப்படத்தில் குறிப்பிட்ட பாடல் மட்டும் வேண்டும் என்றால் முதலில் வீடியோவினை ஓட விடுங்கள். பின்னர் நீங்கள்விரும்பும் பாடல்வரும் வரை காத்திருங்கள். பாடல் வரும் நேரத்தினை அதில் உள்ள ஸ்டார்ட் என்பதி்ல் உள்ள கட்டத்தில் குறித்துக்கொள்ளுங்கள. அடுத்து பாடல் முடியும் நேரத்தினை இதில் உள்ள எண்ட் காலத்தில் குறித்துக்கொள்ளுங்கள்.இப்போது சேவ் கொடுங்கள. நீங்கள் விரும்பும் இடத்தில் பாடல்மட்டும் சேமிப்பாகும்.அதுபோலவே இதில் கிராப் என்கின்ற ஆப்ஷன் கொடுத்துள்ளார்கள்.இதில் வீடியோவில் நீங்கள் எந்த பாகம் மட்டும் தேவையோ அந்த அளவினை தேர்வு செய்து பார்த்துக்கொள்ளலாம். அடுத்து இதில் எபெக்ட் என்கின்ற டேப் கொடுத்துள்ளார்கள்.இதில் நமது வீடியோவின் பிரைட்னஸ்,கான்ட்ராஸ்ட்.Hue.Saturation.நாம் விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம்.அடுத்து இதில் சப்டைட்டில் என்கின்ற டேபினை கொடுத்துள்ளார்கள். இதில் வீடியோவில் நாம் விரும்பும் சப் -டைட்டில்வார்த்தைளை வீடியோ முழுவதும் வருவதுமாக கொண்டுவரலாம்.இதில் நாம் ஏற்கனவே வைத்துள்ள டைட்டில் பைலினை தேர்வு செய்து இதில் வருவதுமாக செய்யலாம்.கடைசியா இதில் உள்ள வாட்டர் மார்க்கினை வீடியொ முழுவதும் கொண்டுவருவதனை பார்க்கலாம். உங்களுக்கான வார்த்தையை தட்டச்சு செய்துகொள்ளுங்கள. வீடியோவின் நிறத்திற்கு ஏற்ப உங்களுடை வார்த்தையின் நிறத்தினை தேர்வு செய்துகொள்ளுங்கள.வீடியோவில் எந்த இடத்தில் வரவேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்துகொள்ளுங்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக இதில் நாம் எந்த பார்மெட்டில் படம் வரவேண்டுமோ அந்த பார்மெட்டினை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
நாம் தேர்வு செய்த வீடியோவின் அனைத்துவித ப்ராபர்டீஸ் விவரங்களும ்நமக்கு தெரியவரும். தற்போதுஉள்ள வீடியோவின் பெயர்-பைல்சைஸ்,எவ்வளவு நேரம் வீடியோ ஓடும்.என்கின்ற விவரமும் ஆடியோ விவரமும் நமக்கு தெரியவரும்.
வீடியோவின் அளவினையும் பைரேட்டினையும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள.
கடைசியா இதில் உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்திட சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் கீழ்கணட் விண்டோ ஓப்பன்ஆகும்.
உங்களுக்கான வீடியோ தேவையான மாற்றங்கள்அடைந்தபின்னர் உங்களுக்காக் நீங்கள் தேர்வு செய்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ இருப்பதை காண்பீர்கள். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
1 comments:
மிக்க நன்றி நண்பரே...
Post a Comment