பவர்பாயிண்ட்டில் நாம் தயாரிக்கும் பைல்களை வீடியோ பைல்களாக மாற்றி எளிதில் பார்வையிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 25 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள பவர்பாயிண்ட பைலினை தேர்வு செய்து பின்னர் அது வீடியோபைலாக மாற்றி சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும். பிறகு இதில் உள்ள நெக்ஸ்ட் பட்டனை கிளிக்ள செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வீடியோவின் நீள அகல அளவுகளை நாம் தேர்வு செய்யவேண்டும். பின்னர் இதில் உள்ள அடுத்த லெவலுக்கு செல்லவும். கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான ஆடியோ செட்டிங்ஸ் தேர்வு செய்து அடுத்த லெவலுக்கு செல்லவும். உஙகளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது கன்வர்டர் செட்டிங்ஸ்ல் உள்ள ப்ரோபைல் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.இதில் நமக்கு தேவையான வீடியோ பார்மெட்டினை தேர்வு செய்யவும். நம்மிடம் உள்ள செல்போனுக்கு ஏற்ற வீடியோ பார்மெட்டினையும் நாம் தேர்வு செய்யலாம்.ட இதன் மூலம் நமது பவர்பாயிண்ட் ப்ரோகிராமினை வீடியோ பைல் மூலம் நமது செல்போனிலேயே கண்டு களிக்கலாம்.
மேலும் நாம் தேர்வு செய்த வீடியோ பைலினை நமககு தேவையான அளவிற்கு செட்டிங்ஸ் மாறுதல் செய்திடும் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக ஓ,கே.கொடுத்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் உங்களுக்கான பவர்பாயிண்ட் பைலானது வீடியோ பைலாக மாற்றம் அடையும் பணி நடைபெறும்.
சில நிமிடங்கள் காத்திருங்கள்.
உங்களுக்கான வீடியோ பைலானது நீங்கள் சேமித்த இடத்தில் இருப்பதை காண்பீர்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே. இதில் தனியாக சேமிக்கப்பட்ட ஆடியோவை இணைக்கும் வசதி உண்டா?
முனைவர் இரா.குணசீலன் said...
மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே. இதில் தனியாக சேமிக்கப்பட்ட ஆடியோவை இணைக்கும் வசதி உண்டா?//
கொடுத்துள்ளார்கள் நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.
Post a Comment