வேலன்:-அனைத்துவகை பார்மெட் புகைப்படங்களையும் எளிதில் பாரவையிட -Honeyview

புகைப்படங்களை எளிதில் பார்வையிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. புகைப்பட பார்மெட் எத்தகைய பார்மெட்டாக இருந்தாலும் இந்த மென்பொருள மூலம் எளிதில் பார்வையிடலாம். இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில உள்ள ஓப்பன் ;இமெஜ் கிளிக் செய்து புகைப்படத்தினையோ புகைப்படங்கள் உள்ள போல்டரினையோ திறந்துகொள்ளவும்.
இதன் கீழே உங்களுக்கு செட்டிங்ஸ் கொடுத்துள்ளார்கள். புகைப்படங்களை திருப்ப பெரியதாக்கி பார்க்க சிறியதாக்கஅடுத்தடுத்த புகைப்படங்கள் பார்க்க என நிறைய டூல்கள் கொடுத்துள்ளார்கள்.
இதன் மேல்புறம் உள்ள டேபில் நீங்கள் புகைப்படங்களை பார்வையிட.ஸ்லைடஷோவாக கொண்டுவர புக் மார்க் செய்திட டெக்ஸ்டாப்பில் பேக்கிரவுண்ட்டாக கொண்டுவர கிளிப்போர்டில் காப்பி செய்திட என நிறைய டேப்புகள் கெர்டுத்துள்ளார்கள். தேவையானதை நீங்கள் பெறலாம்.
இதில் உள்ள போட்டோவியு கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் தேர்வு செய்த புகைப்படங்கள் தம்ப்நெயில் வியுவாக தெரியவரும். தேபையான புகைப்படத்தினை தேர்வு யெச்து பார்வையிடலாம். மேலும் இதில் மேல்புறம் உள்ள :ஐகானினை தேர்வு செய்திட புகைப்படங்கள் எடுக்கப்பட்ட தேதி.கேமரா வகை.புகைப்படம் எடுக்கப்பட்ட நேரம்.ஷெடடர் வேகம்.என புகைப்டத்திற்கு தேவையான அனைத்து தகவல்களும் நமக்கு கிடைக்கும். புகைப்படங்களை பிரிண்ட் செய்யும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...