புகைப்படங்கள் எந்த வகை பார்மெட்டில் இருந்தாலும் அதனை பார்வையிட மாற்றங்கள் செய்திட பிரிண்ட் செய்திட.வால்பேப்பராக வைத்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும ;விண்டோவில் நீங்கள் விரும்பும் புகைப்படத்தினையோ புகைப்படங்கள் உள்ள போல்டரினையோ தேர்வு செய்திடவும்.
நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் எந்த பார்மெட்டில் உள்ள தோ அந்த பார்மெட்டானது வாட்டர்மார்க்கில் புகைப்படத்தின வலதுபுறம் தோன்றும். அதுபோல புகைப்படத்தின் ப்ரிவியூவும் சிறிய விண்டொவாக தோன்றும்.தேவையில்லையென்றால் ;அதனை நிங்கள் நீக்கி கொள்ள்லாம்.
ஓன்றுக்கும் :மேற்பட்ட புகைப்படங்களை தேரவு செய்கையில் நீங்கள் இதன் கீழே உள்ள அம்புகுறியை கிளிக் செய்வதன் மூலம் புகைப்படங்களை மாற்றி மாற்றி பார்வையிடலாம்.
இதில் நடுவில் உள்ள பட்டனை கிளிக் செய்திட படமானது உங்கள் முழுஸ்கிரீனிலும் தெரியவரும். மேலும் இதில் உள்ள ஸ்லைடரினை நகர்ததுவது மூலம் புகைப்படத்தினை பெரியதாகவோ சிறியதாகவோ மாற்றி பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment