புகைப்படங்களில் வேண்டிய அளவிற்கு கொண்டுவர,வேண்டிய பார்மெட்டுக்குமாற்றிட.புகைப்படங்களில் வெளிச்சம் கொண்டுவர,வாட்டர்மார்க் கொண்டுவர,இந்த மென்பொருள் பயன்படுகின்றது. புகைப்படங்களில் கீழ்கண்ட மாற்றங்கள் கொண்டுவரலாம்.
- Resize
- Rename
- Rotate
- Add Watermarks
- Filters
- Color Settings
- Batch editing.
- Save as JPG,PNG,BMP,TIF,GIF …
இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை டவுண்லோடு செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன்ஆகும்.
புகைப்படங்களில் Brightness.Contrast,Saturation கொண்டுவர இதில் உள்ள அம்புகுறியை கிளிக்செய்தால் போதுமானது.வேண்டிய மாற்றங்கள் புகைப்படங்களில் தெரிவரும். அதுபோல Red.Green.Blue போன்ற நிறங்களை கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.புகைப்படங்களில வேண்டிய அளவு கொண்டுவர இதில் உள்ள கர்சரை நகர்த்தவேண்டும். இதன் மூலம் தேவையான அளவிற்கு படத்தினை சுற்றி வெள்ளை மார்க் தெரியவரும். ஒ.கே. தரவும்.
இதில் உள்ள எழுத்துருவினை கிளிக்செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான வார்தையை தட்டச்சு செய்து அதன் நிறம் அளவு புகைப்படங்களில் வரப்போகின்ற இடம் ஆகியவற்றை முடிவு செய்து ஒ.கே.தாருங்கள்.
இதில உள்ள ஆட்டோ கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் JPG.PNG.GIF.TIF.BMP. என நிறைய பார்மெட்டுக்ள் கொடுத்துள்ளார்கள் தேவையாதை கிளிக் செய்தால் போதும்.
இறுதியாக புகைப்படங்களை சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்து ஸ்டார்ட் கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புகைப்படம் நீங்கள் வேண்டிய பார்மெட்டில் வேண்டிய அளவில்.வேண்டிய வாட்டர்மார்க்கில் இருப்பதனை காணலாம்.பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment