இணையதளத்தில் டோரன்ட் பைல்கள் மூலம் பதிவிறக்கம் செய்கையில் வீடியோக்களின் தரத்தினை நாம் முழுவதும்பதிவிறக்கம் செய்து முடித்ததும் தான் காணமுடியும். ஆடியோ சரியில்லாமல் இருந்தாலோ -வீடியோவின் தரம் குறைவாக இருந்தாலோ பதிவிறக்கம் செய்தது வீணாகிவிடும். நேரம் பணம் அனைத்தும் வீணாகிவிடும். இந்த குறையை போக்க யு டோரன்ட் புதிய வசதியை அறிமுகப்படுத்திஉள்ளது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கான டோரன்ட் தேர்வு செய்ததும் உங்களுக்கான வீடியோவானது ப்ரிவியூ தெரிய வரும்.
படத்தின் ப்ரிவியூ பார்த்து விடியோவின் தரத்தினையும் ஆடியோவினையும் கண்டு படத்தினை மேற்கொண்டு பதிவிறக்கம் செய்வதோ வேண்டாமோ என நாம் முடிவு செய்துகொள்ளலாம்.இதில் நீங்கள் எவ்வ்ளவு பைல்கள் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு வீடியோபைல்களையும் ப்ரிவியூபார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்து முடித்ததும் நீங்கள் சேமித்த இடத்தில் சென்று வீடியோவினை கண்டுகளிக்கலாம். பயன்படத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment