வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.

கணினி பயன்படுத்துகையில் நாம் முகநூல் எவ்வளவநேரம் பயன்படுத்தினோம்,கணினியில் எவ்வளவு நேரம் விளையாடினோம்,இணையம் எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம்,கணினி எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம் என அறிந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து ஒப்பன் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக்செய்திடவும். இப்போது இதில் உள்ள பேஸ்புக்,விளையாட்டு,இன்டர்நெட்மற்றும் கணினி பயன்பாடு அனைத்து ரீடிங்கும் ஒட ஆரம்பிக்கும்.
 இதில் உள்ள ரிப்போர்ட் கிளிக் செய்திட உங்களுக்கு விண்:டோ ஓப்பன் ஆகும். அதில் Internet Social Use.Games Use.Internet Use.Computer Use.Software Use.Website Use.Details என டேப்புகள்கொடுத்துள்ளார்கள். 
இதில் தேவையானதை நாம் தேர்வு செய்தால் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் நாம் எந்த மென்பொருளை எவ்வளவு நேரம் பயன்படுத்தினோம் என அறிந்துகொள்ளலாம்.மேலும் கணினியில் பயன்படுத்திய அனைத்துவிவரங்களும் நாம் அறிக்கையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நாம் அலுவலக பயன்பாட்டிலும் சரி.வீட்டு பயன்பாட்டிலும் சரி...கணினியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினார்கள் என எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...