புத்தாண்டு பிறந்துவிட்டது. நீங்கள் உங்களுக்கான காலண்டரை
நீங்களே தயாரிக்கலாம்.இதன் முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும். இதில் உள்ள
சாப்ட்வேரினை டவுண்லோடு செய்து ஓப்பன் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் Yearly Planner.6-Month Planner.Monthly Planner.Picture
Calendar என 12 விதமான டேம்ள்ளேட்டுகள் கொடுத்துள்ளார்கள். இதில் முதலில் உள்ள
வருடாந்திர பிளானரில் நாம் அந்த வருடத்திய பிளான்களை பதிவிறக்கம் செய்து
குறித்துவைத்துக்கொள்ளலாம். அதுபோல 6 மாதம் மற்றும் மாத பிளாணர்கள் உள்ளது.கீழே
உள்ள விண்டோவில பாருங்கள்.
இதில் உள்ள பிக்ஸர் காலண்டரில் நமக்கு விருப்பமான புகைப்படத்தினை
இன்சர்ட் செய்து கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பூக்கள் பழங்கள் என தீம்கள் நிறைய கொடுத்துள்ளார்கள்.காலண்டர் டிசைனுக்கு அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ளளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் வலதுபுறம் காலண்டர்.பார்மெட்.மார்ஜின்.கலர் மற்றும்
தீம்கள்.பாண்ட்கள் பிரிண்ட் பிரிவியு என நிறைய டேப்புகள்கொடுத்துள்ளார்கள்.மேலும் புகைப்படத்திற்கு ஏற்ப காலண்டர் இடத்தினை நாம் அட்ஜஸ்ட செய்துகொள்ளலாம்.இதில்
இன்சர்ட் செய்து வந்துள்ள புகைப்பட காலண்டரை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.