புத்தாண்டில் டைரிகளை விரும்பி வாங்கி வைப்போம். வாங்குவதோடு சரி..சிலர் தான் அதனை பயன்படுத்துவார்கள்.கம்யூட்டரில் அதிகம் பயன்பபடுத்துபவர்கள் தனியே டைரிகளை குறித்துவைப்பது இல்லை. அவர்களுக்காகவே இந்த கம்யூட்டர் டைரி பயன்படுகின்றது. இதில் வருடத்தின் 365 நாட்களும் நமக்கு தெரியவரும். 609 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை டவுண்லோடு செய்தது அதன் ஐ-கானை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தற்போதைய வருடம் நமக்கு தெரியவரும் மேலும் 2009 முதல் 2036 வரையிலான காலண்டர் நமக்கு கிடைக்கும். இருபத்துஐந்து வருடம் கழித்து வருகின்ற தேதியையும் கிழமையும் நாம் அறிந்துகொள்ளலாம்.இதில் உள்ள New கிளிக் செய்ய உங்களுக்கு New Legent என்கின்ற விண்டோ ஓப்பன் ஆகும. இதில் ஆரம்ப மற்றும் முடிவு தேதியினை நாம் நிர்ணயம் செய்துகொள்ளலாம். தகவல் குறிப்பதற்கும் தனியே காலம் உள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இது தவிர குறிப்பிட்ட தேதிகளில் வரும் திருமணம்,பிறந்தநாள் மற்றும் சுபநிகழ்ச்சிகளையும் இதில் குறித்துவைக்கலாம். இதில் உள்ள காலண்டரில் நீங்கள் எந்த தேதியை குறிக்க விரும்புகின்றீர்களோ அந்த தேதியில் வைத்து கர்சரை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள New கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுக்கான குறிப்புகளை குறித்துவைக்கவும்.நேரம்,அப்பாயிண்ட்மெண்ட் ப்ரியாரிட்டி.அப்பாயிண்ட்மெண்ட டிஸ்கிரீப்ஷன் மற்றும் அப்பாயிண்ட்மெண்ட பற்றிய குறிப்புகளை விரிவாக எழுதிவைக்கலாம்.இறுதியாக இதில் உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போழுது நீங்கள் காலண்டரில் சென்று பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட தேதியானது போல்ட் லெட்டரில் காட்சியளிக்கும். அதனை கிளிக் செய்தால் நாம் குறிப்பிட்ட அப்பாயிண்ட்மேண்ட விவரம் தெரியவரும்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
5 comments:
நன்றி அண்ணா
பயனுள்ள தகவல் நண்பரே
sakthi said...
நன்றி அண்ணஃஃ
நன்றி சக்தி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
அ.குரு said...
பயனுள்ள தகவல் நண்பரே
குரு சார்...உங்களுக்கு பயன்படும் நிறைய பதிவுகள் எடுத்து வைத்துள்ளேன்.ஒவ்வொன்றாக பதிவிடுகின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Bhavani lakshmi said...
nice
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment