மெயில் நமக்கு வந்துள்ளதா - இல்லையா என நாம் ஒவ்வொருமுறையும் மெயில் ஓப்பன் செய்து பார்க்கவேண்டும்.நாம் இணையத்தில் பணிபுரியும்போதே நமக்கு மெயில் வந்துள்ளது என தகவல் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கான வசதியை ஜிமெயில் தந்துள்ளது. ஜிமெயில் Peeper என்கின்ற இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள செட்டிங்ஸ்ல் நீங்கள் உங்கள் ஜிமெயில் முகவரியையும் பாஸ்வேர்டினையும் தட்டச்சு செய்யவும். ஜிமெயிலே இந்த வசதியை தருவதால் நம்பி பாஸ்வேர்டினை தரலாம்.
அடுத்து எவ்வளவு நிமிடத்திற்கு ஒரு முறை நமக்கு தகவல் வரவேண்டுமோ அதனை செட் செய்துவிடவும்.மெயில் வரும்சமயம் நமக்கு ஒலி வேண்டுமானால் Sound Alert செட் செய்யலாம் இறுதியாக சேவ் செய்து வெளியேறவும்.
இப்போது நமக்கு மெயில் வந்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்;.
அதனை கிளிக்செய்து பார்க்கையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் மெயில் எங்கிருந்து வந்துள்ளது- மற்றும் அதன் சப்ஜெக்ட் எதை பற்றி என்றும் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் நாம் மெயில் திறந்து பார்க்கும் நேரம் மிச்சமாகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.