டெக்ஸ்டாப்பில் உள்ள வால்பேப்பரை நாம் ஓவ்வொரு முறையும்
மாற்றம் செய்வோம். சிலர் மாதம் ஒரு முறையும்- சிலர் வாரம் ஒரு
முறையும்- மற்றும் சிலர் தினம் ஓரு முறையும் வால்பேப்பரைமாற்றம் செய்வார்கள். இந்த சாப்ட் வேர் ஆனது 15 நிமிடத்துக்கு
ஓரு முறை தானே மாறும் வசதி கொண்டது . அது மட்டும்
அல்லாமல் படம் மாறும் சமயம் நமக்கு விருப்பமான பாடலை
செட் செய்துவிட்டால் பாடலும் ஒலிக்கும். முதலில் இந்த
சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் சாப்ட்வேரை டவுண்லோடு செய்து உங்கள் கணிணியில்
சேமியுங்கள். இப்போது உங்களுக்கு டாக்ஸ்பாரில் அமர்ந்துவிடும்.
அதை கிளிக் செய்யுங்கள். இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் உங்கள் கணிணியில் உள்ள போட்டோக்கள் வரவேண்டும்
என்றால் Photo Browser கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள Add Photoes கிளிக் செய்த்து
உங்கள் டிரைவில் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள்.
அதில் உள்ள Settings கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டொ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ளது வால்பேப்பர் செட்டிங்.
இதில் உங்கள் விருப்பப்படி வால்பேப்பரை செட் செய்யுங்கள்.
அடுத்து எவ்வளவு நேரத்துக்கு ஓரு முறை படம் மாற வேண்டுமோ
அதன்படி படத்தை மாறும்படி செட்டிங்
செய்யுங்கள். மேலும் இதில் படம் மாறும் சமயம் நமது விருப்ப
பாடலை ஒலிபரப்ப செய்யலாம்.செட்டிங்குகள் செய்து முடிந்ததும்
ஓகே செய்யுங்கள்.
அதைப்போல் இதில் Screen Saver,Photos,DownLoad,
TaskBar Try,Desktop,Shortcut key,மற்றம் Download Settings என பல
செடடிங்குகள் உளளது. இதில் உள்ள டெக்ஸ்டாப்பில் கிளிக்
செய்ய உங்களுக்கு காலெண்டர் கிடைக்கும். வேண்டிய நிறத்தினை
நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
டெக்ஸ்டாப்பின் மூலையில் வந்து அமர்ந்துவிடும் காலண்டர் படம் கீழே:-
வேண்டிய படங்களை மாற்றுவதற்கும் Shortcut Keys உள்ளன.
தினசரி போட்டோக்களை இணையத்திலிருந்தும் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். அதற்கும் உங்களுக்கு செட்டிங்ஸ் உள்ளது.
இதில் உள்ள Daily Photos கிளிக் செய்து ஓ கே கொடுத்தால்
உங்களுக்கு படமானது தினசரி விதவிதமாக மாறிவிடும்.
பதிவினை பாருங்கள். பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
கம் யூட்டரில் டெக்ஸ்டாப் படம் இதுவரையில் மாற்றியவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்