Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

வேலன்-பிளாக்கில வீடியோவினை வரவழைக்க

கடந்த பதிவில் நண்பர் ரியாஸ் அவர்கள் பிளாக்கில் வீடியோவினை இணைப்பது பற்றி கேட்டிருந்தார்.





Riyas சொன்னது…








அருமையான பதிவு வேலன் சார்..
எனக்கு என் பிளாக்கரில் வீடியோ கிளிப் எப்படி இனைப்பது பற்றி தெரியாது தயது சொல்லித்தர முடியுமா..?
அவருடைய இ மெயில் முகவரிக்கு தனியே விளக்கம் அளிக்கலாம் என்றிருந்தேன். அதைவிட பதிவிட்டால் இதுபற்றி தெரியாதவர்களுக்கும் தெரிய இங்கே பதிவிடுகின்றேன்.
முதலில் உங்களுடைய வீடியோவினை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.உங்கள் வீடியோவானது mp4 ஆக இருப்பது நல்லது. மற்ற பார்மெட்டுக்களைவிட இந்த பார்மெட்டானது வீடியோவின் அளவை குறைத்துவிடும்.பி்ன்னர் 4 shared.com -ல் கணக்கு ஒன்றை துவக்குங்கள். இது இலவச சேவை மற்றும் 200 எம்.பி. வரை இதில் பதிவினை ஏற்றலாம். இந்த 4 Shared.com ல் பதிவினை எப்படி ஏற்றுவது என் று முன்னரே நான் பதிவிட்டுள்ளேன். உங்களுக்காக மீண்டும் அதனை பதிவிடுகின்றேன்..
முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.(இப்போது புது டெம்ப்ளேட் மாற்றி உள்ளார்கள். இது பழைய டெம்ப்ளேட் படம்)
இதில் உள்ள GET 5 GB OF FREE SPACE கிளிக் செய்யவும். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் இ-மெயில் முகவரியை தட்டச்சு செய்யுங்கள்.
பாஸ்வேர்ட் கொடுங்கள். மற்றும் ஒரு முறை பாஸ்வேர்ட்
கொடுங்கள். இதில் உள்ள இலவசம் என்பதை தேர்ந்தேடுங்கள்.
கீழே உள்ள Sign Up கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில்
உள்ள ஓ.கே. கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.அதே சமயம்
உங்கள் இ-மெயில் முகவரிக்கு இ-மெயில் ஒன்று வந்திருக்கும்.
இதில் கீழ்புறம் உள்ளChoose file கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்ந்தெடுத்துகிளிக் செய்யுங்கள்.அடுத்து கீழ் உள்ள Upload கிளிக் செய்யுங்கள்.
இதில் உள்ள கட்டத்தில் பார்த்தீர்களேயானால்
பச்சைநிற கட்டங்கள் வருவதை காணலாம்.பைல் Upload
ஆகி முடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள்ள Done கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் இரண்டாவதாக உள்ள Embed கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வீடியோ அளவினை அகலம் மற்றும் உயரம் தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள். அடுதுது இதில் உள்ள Copy கிளிக் செய்யுங்கள். பின்னர் உங்கள் பிளாக்குக்கு வாருங்கள். அதில் உள்ள HTML ஐ திருத்து கிளிக செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். 
அதில் பேஸ்ட் செய்யுங்கள்.இப்போது எழுது கிளிக் செய்து பார்த்தீர்களேயானால் உங்கள் வீடியோவானது இருக்கும். முன்னோட்டம் கிளிக்செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.நண்பர் ரியாஸ் அவர்களுக்கு சந்தேகம் தீர்ந்திருக்கும் என எண்ணுகின்றேன்.
எனது சென்ற பதிவான கூகுள் குரோம் புக்மார்க்கை சேமிக்க தமிலிஷ்ஷில் பதிவிட்டேன். அதில் இருக்கு - ஆனால் இல்லை.இதுபற்றி அவர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தேன். பதில் இல்லை. அந்த பதிவை இதுவரை 450 பேர் பார்த்துள்ளார்கள். பதிவினை காணாதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துவிட்டு மறக்காமல் ஒட்டுபோட்டு செல்லுங்கள். அப்போதாவது அவர்கள் அதை முன்னணியில் பதிவிடுகின்றார்களா என பார்க்கலாம்.
மீண்டும் நாளை சந்திக்கலாம். 
வாழ்க வளமுடன்
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-Screen Saver-ஸ்கிரீன் சேவரில் வீடியோ வரவழைக்க


ஸ்கிரீன் சேவரில் நாம் புகைப்படங்களை மாற்றுவதை பார்த்துள்ளோம். அதைப்போல புகைப்படங்களுடன் இசையையும் ஒலிப்பதை பார்த்துள்ளோம். ஆனால்இந்த சாப்ட்வேரில் ஸ்கிரீன் சேவராக வீடியோ படம் ஓடுவதை காணலாம்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.3 எம்.பி. கொள்ளளவு உள்ள இது இலவச சாப்ட்வேரே..இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் உள்ள Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். இதில் கம்யூட்டர் எவ்வளவு நேரம் காத்திருந்தால் உங்களுக்கு வீடியோ வரவேண்டுமோ அந்த நேரத்தை குறிப்பிடவும்.ஒலியையும் மீண்டும் கணிணி இயல்பு நிலைக்கு திரும்புவதையும் இதில செட் செய்திடலாம்.
டாக்ஸ்க்பாரில் உள்ள Main என்பதனை கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் வீடியோ உள்ள போல்டரை தேர்வு செய்துகொள்ளலாம். அதைப்போல ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ போல்டர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் செட் செய்த வீடியோவானது குறிப்பிட்ட நேரம் நீங்கள் கம்யூட்டருக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் இருந்தால் ஸ்கிரீன்சேவராக வீடியோ படம் ஓட ஆரம்பிக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...