Showing posts with label video. Show all posts
Showing posts with label video. Show all posts

வேலன்:-Screen Saver-ஸ்கிரீன் சேவரில் வீடியோ வரவழைக்க


ஸ்கிரீன் சேவரில் நாம் புகைப்படங்களை மாற்றுவதை பார்த்துள்ளோம். அதைப்போல புகைப்படங்களுடன் இசையையும் ஒலிப்பதை பார்த்துள்ளோம். ஆனால்இந்த சாப்ட்வேரில் ஸ்கிரீன் சேவராக வீடியோ படம் ஓடுவதை காணலாம்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.3 எம்.பி. கொள்ளளவு உள்ள இது இலவச சாப்ட்வேரே..இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு டாக்ஸ்பாரில் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் உள்ள Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும். இதில் கம்யூட்டர் எவ்வளவு நேரம் காத்திருந்தால் உங்களுக்கு வீடியோ வரவேண்டுமோ அந்த நேரத்தை குறிப்பிடவும்.ஒலியையும் மீண்டும் கணிணி இயல்பு நிலைக்கு திரும்புவதையும் இதில செட் செய்திடலாம்.
டாக்ஸ்க்பாரில் உள்ள Main என்பதனை கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் வீடியோ உள்ள போல்டரை தேர்வு செய்துகொள்ளலாம். அதைப்போல ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ போல்டர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் செட் செய்த வீடியோவானது குறிப்பிட்ட நேரம் நீங்கள் கம்யூட்டருக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் இருந்தால் ஸ்கிரீன்சேவராக வீடியோ படம் ஓட ஆரம்பிக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- ஒரே சாப்ட்வேரில் எட்டு வெவ்வேறு பணிகள்.


கதை,திரைக்கதை,வசனம்,நடிப்பு,பாடல்கள்,இசை,டைரக்ஷன்,
தயாரிப்பு என இருப்பவரை அஷ்டாவாதினி என்பார்கள்.அதைப்
போல் இந்த சாப்ட்வேரை சாப்ட்வேர்களில் அஷ்டாவாதினி
 எனலாம். நான் பதிவிடும் சிறந்த சாப்ட்வேர்களில் இதுவும் 
சேரும் என எண்ணுகின்றேன். இதை பதிவிறக்க இங்கு கிளிக்
செய்யவும்.
இந்த சாப்ட்வேர் மூலம் நாம் ஆடியோ -வீடியோ பிளேயராக இதை உபயோகிக்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் நமது கம்யூட்டரில் உள்ள பைலை ஒப்பன் மூலம் 
தேர்ந்தேடுக்கவும். பின்னர் பிளே அழுத்தி படம் பார்க்கலாம்.
 இதில் உள்ள படத்தை ஓடும் சமயம் ப்ரேம் ஸ்டெப் 
பயன்படுத்தி ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம். Change Ratio
 மூலம் வேண்டிய அளவிற்கு படத்தை பெரிதாக சிறியதாக மாற்றிக்கொள்ளலாம்.
அடுத்துள்ளது Audio/Video Cutter.கீழே உள்ள விண்டோவினை
 பாருங்கள். 
 இதன் மூலம் ஆடியோ பைல்களையும்-வீடியோ
 பைல்களையும் வேண்டிய அளவிற்கு கட் செய்து 
வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றி வேண்டிய இடத்தில்
 சேமித்துக்கொள்ளலாம்.
அடுத்துள்ளது ஆடியோ கன்வர்ட்டர் . கீழே உள்ள
 விண்டோவினை பாருங்கள்.
இதன்மூலம் உங்களது ஆடியோ பைல்களை இதன்
 மூலம் ஓப்பன் செய்து அதை Mp3.wav.aac.wma.flac.M4a.ac3
 என வேண்டிய பார்மெட்டுக்களுக்கு மாற்றி வேண்டிய
 இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.
இதைப்போலவே வீடியோ கன்வர்ட்டர். இதன் மூலமும்
 வேண்டிய பார்மெட்டுக்கு வீடியோவை சுலபமா
 மாற்றிக்கொள்ளலாம்.
அடுத்துள்ளது போட்டோ கட்டர். 
உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படத்தை திறந்து
 கொண்டு அதை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்
கொள்வதோடு அல்லாமல் வேண்டிய அளவிலும் அதை கட்
 செய்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் இதில 100
 புகைப்படங்களின் அளவையும் பார்மெட்டையும் மாற்றிக்கொள்ளலாம்.வேண்டிய அளவினை கொண்டுவர
 இதில் உள்ள Custom Ratio என்பதனை கிளிக் செய்யவேண்டும்.
 கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து இதில் உள்ள போட்டோ ரீ -சைஸரும் நமக்கு
 வேண்டிய அளவிற்கு புகைப்படஙகள் மாற்ற உதவுகின்றது:. 
அடுத்துள்ளது Slide Show. இது நம்மிடம் உள்ள புகைப்படங்களை
 ஸ்லைட் ஷோவாக மாற்றிக்கொள்வதோடு அல்லாமல்
 அதில பின்னணி இசையையும் சேர்க்கலாம். படம்
 மாறும் நேரத்தையும செட் செய்யலாம்.கீழே உள்ள
 விண்டோவினை பாருங்கள்.
கடைசியாக இன்டர்நேட் டூல்ஸ். இதை கிளிக்செய்வதன்
 மூலம் இணையத்தில  ் நாம் பார்க்கும் டெக்ஸ்ட்டை
 தேர்வு செய்து அதை படிக்க செய்யலாம்.கீழே உள்ள
 விண்டோவினை பாருங்கள்.
      
தேவையான அளவிற்கு விளக்கியுள்ளேன்.பதிவினை
 பாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள். பதிவின் நீளம 
கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். 
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST OF JOLLY PHOTOS:-
இதனால் சகபதிவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நம்
சக பதிவருக்கு மே மாதம் 13 ந்  தேதி பிறந்த நாள் வருகின்றது.
 365 நாட்களில்,  "நான்" பிறந்தேன் என்று சொல்லி பெருமைப்பட்டு 
கொள்ள கொடுத்து வைத்த நாள் என அவர் சொல்கின்றார்.
எனவே சக பதிவர்களே-நண்பர்களே-நீங்கள் மே மாதம் 13 ந்
  தேதி அன்று(.இன்னும் ஒரு நாள் கூட இல்லை) தோரணம்
 கட்ட மறக்காதீங்க. மைக் செட், பாட்டு கச்சேரி, பட்டாசு,
 தங்க செயின், ஆயிரம் ரூபாய் நோட்டு மாலை எல்லாம்
 ஆர்டர் செய்துவிடுங்கள்.மறக்காமல் வாழ்த்தலாம் வாங்
(http://vazthalamvanga.blogspot.com/)  பதிவிற்கு வந்து வாழ்த்து
சொல்லிவிட்டுபோங்க.வருகைதந்து 
வாழ்த்துபவர்கள் எல்லோருக்கும் அறுசுவையுடன்விருந்து
 அவரவர் வீட்டிலேயே செய்து 
சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.  


இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஆங்கில பாடம் -9 (Hello English)

ஆங்கிலம் எளிதில் கற்க பாடம் 8 வரை

இதுவரை பார்த்தோம். இதுவரை

பாடங்கள் படிக்காதவர்களுக்காக

முன்பு வந்த பாடங்கள் எட்டின்

தொகுப்பை இங்கு பதிவிட்டுள்ளேன்.

இங்கு பார்த்துக்கொள்ளவும்.


பாடம்-1 ,MY NAMES



பாடம்-3 MY THINGS-2



இனி ஓன்பதாவது பாடமாக

நமது பாடத்தின் கதாநாயகன்

Clever Chinna பற்றி பார்க்கலாம்.

அதற்கான வீடியோ தொகுப்பு

கீழே கொடுத்துள்ளேன்:-



இந்த பாடத்திற்கான 4 Shared.com

இணைய சுட்டியை கீழே இணைத்துள்ளேன்.

தேவைபடுவபர்கள் அங்கே சென்று

பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

பாடங்களை பாருங்கள்.
பிடித்திருந்தால் மறக்காமல்

ஓட்டுப்பொடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பாடம் 9 ஐ இதுவரை படித்தவர்கள்
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...