Showing posts with label வேலன்.பியானோ.velan.drums.piano.. Show all posts
Showing posts with label வேலன்.பியானோ.velan.drums.piano.. Show all posts

வேலன்:-டிரம்ஸ் சுலபமாக கற்றுகொள்ளலாம் வாங்க

கொஞ்சும்சலங்கை படத்தில் ஒரு வசனம் வரும்-ஏன் நிறுத்திவிட்டாய் ராதா - உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ஒடோடி வந்த என்னை ஏமாற்றலமா? என ஜெமினிகணேசன் சாவித்திரி அவர்களை கேட்பார். அதைப்போல இந்த சின்ன சாப்ட்வேரில் நீங்கள் இசை பயின்றால் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் இதே வசனத்தை உங்களிடம் கேட்பார்கள்.80 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கீபோர்டில் எந்த எந்த கீ எந்த டிரம்ஸ் இசைக்கு வரும் என உங்களுக்கு டிஸ்பிளே காண்பிக்கும்.. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேல்புறம் எண்களுக்கான கீ களும உங்களுக்கு கிடைக்கும்.
 வலது புறம் உங்களுக்கு தேவையான செட்டிங்ஸ்கிடைக்கும். உங்கள் தேவைக்கு ஏற்ப இதனை தேர்வு செய்துகொள்ளலாம்.
 அதைப்போலவே இடதுபுறம் டிரம்ஸ் பின்புற நிறம் - மேட் டிசைன் என தேர்வு செய்யலாம்.
கூடுதல் இணைப்பாக Xilophone உள்ளது. தேவையானால் அதனையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எனது மகனுக்கு இதனை இன்ஸ்டால் செய்து விளையாட கொடுத்தேன்.குஷியாக விளையாடிக்கொண்டு இருக்கின்றான்.புதுபுது இசையை வாசித்துகாண்பிக்கின்றான்.நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
எனது முந்தைய பியானா - டிரம்ஸ் சம்பந்தப்பட்ட பதிவுகள் கீழே:-
கீபோர்டடில் பியானோ
டிரம்ஸ் அடிக்கலாம் வாங்க
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...