
நமது நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் குகூள் தேடுபொறியை Search Box -ஐ வலைப் பதிவில் இணைக்க சொல்லிகேட்டிருந்தார்.அவரின் விருப்பத்திற்கு ஏற்ப உடனே அதை வலைப்பதிவில் இணைத்துவிட்டேன். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இனி புதியதாக பிளாக் ஆரம்பிப்பவர்களும் - ஏற்கனவே இதுபோல் பிளாக் வைத்திருப்பவர்களும் இநத தேடுபொறியை Search Box நமது பிளாக்கில் எவ்வாறு கொண்டுவருவது என்று இன்று பார்க்கலாம்.கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்துகொள்ளுங்கள்.
<form id="searchThis" action="/search" style="display:inline;" method="get"><input id="searchBox" name="q" type="text" /> <input id="searchButton" value="go" type="submit" /></form>
பின்னர் உங்களுடைய டாஷ்போர்டு - வடிவமைப்பு - கேஜட்டை சேர் - ஹச்டிஎம்எல் -(Dashboard - Design - Add a gadget - Html/Java Script)சென்று இந்த கோடிங்கை சேர்க்கவும். தலைப்பில் விரும்பிய வார்த்தையை கொடுக்கலாம்.நான் தேவைகளை தேடுக என்று தலைப்பு கொடுத்துள்ளேன். அதைப்போல இந்த கோடிங்கில் பார்த்தீர்களே யானால் அதில் கடைசியாக "go" என்கின்ற வார்த்தைக்கு பதில் செல் என்கின்ற வார்த்தையை சேர்த்துள்ளேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமான சொல்லை சேர்க்கலாம்.,இவ்வாறு தேடுபொறியை இணைத்துவிட்டால் நமக்கே சிலசமயம் தகவல்கள் ஏதாவது தேவைபடும் சமயம் சுலபமாக தேடிக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்