Showing posts with label free software.. Show all posts
Showing posts with label free software.. Show all posts

வேலன்-Youtube -லிருந்து வேண்டிய பார்மெட்டுக்கு பதிவிறக்கம் செய்ய


இணையம் பயன்படுத்தினாலே அதில் youtube தவிர்க்க முடியாது. ஏதாவது ஒரு சமயத்தி்ல் நாம் youtube லிருந்து வீடியோவை தரவிறக்கம் செய்வோம்.  youtube லிருநது டவுண்லோடு செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் இருந்தாலும் சற்று வித்தியசமாக இந்த சாப்ட்வேர் உள்ளது. 4 எம்.பி .கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு இன்ஸ்டால் செய்தததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து Youtube URL ஐ காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.

தரவிறக்கம் செய்யப்படும் பைல் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு இதில் எளிதில மாற்றிக்கொள்ளலாம். இது ஆதரிக்கும் பார்மெட்டாக
 1)None (No converting, FLV file type)
(2)AVI (Microsoft Windows Media File Type)
(3)WMV (Zune/PocketPC File Type)
(4)MOV (QuickTime File Type)
(5)MP4 (iPod/PSP/MP4 Player File Type)
(6)3GP (Mobile Phone Video File Type) உள்ளன. 3 GP ஐ இது ஆதரிப்பதால் செல்போன் மற்றும் ஐ-பாட்டுக்கு இதிலிருந்து நேரடியாக பதிவேற்றிக்கொள்ளலாம்.அதுபோல சில ஆடியோ பைல்கள் பாடல்களை நாம் கேட்கமட்டுமே முடியும். அதை பதிவிறக்கம் செய்ய முடியாது. அந்த மாதிரியான பாடல்களை இதன் மூலம் எளிதில பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடோப் பிரிமியர் உபயோகிப்பவர்கள் யு டியுப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யும் பாடல்களை பிரிமியரில் நேரடியாக பயன்படுத்தமுடியாது. அந்த சமயங்களில் இந்த சாப்ட்வேர் மூலம் MOV பைலாக பதிவிறக்கம் செய்து எளிதில்பயன்படுததிக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டெக்ஸ்டாப்பில் உலகம்

அனைவருக்கும் இனிய தமிழ்வருட பிறப்பு வாழ்த்துக்கள்.
இதுவரையில் எனது பதிவினை பின் தொடர்பவர்களாக 452 நண்பர்கள் உள்ளனர். அவர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும்.ஆனால் பதிவின்மூலம் என்னால் அதை செய்யமுடியாது.சில விஷேஷ பதிவுகளை அவர்களுக்கு தனியே மின் - அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புகின்றேன்.எனவே விரும்பும் அனைவரும் என்னுடைய மின்-அஞ்சல் முகவரிக்கு (velantkm@gmail.com) உங்களுடைய பதிவின் பெயர்,உண்மையான பெயர்,முகவரி மற்றும் இ-மெயில் முகவரி அனுப்ப வேண்டுகின்றேன்.விருப்பபட்டால் உங்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளையும்குழந்தைகளின் பிறந்தநாளையும் அதைப்போல் விருப்பபட்டால் உங்கள் புகைப்படம் -குழந்தைகள் புகைப்படம் இணைத்தால் நலம்.நீங்கள் கொடுக்கும் விவரங்கள் பாதுகாப்பானது.எனவே கவலை வேண்டாம்.என்ன மெயில் அனுப்ப தயாராகிட்டீங்களா...
அன்புடன்,
வேலன்.

உலகில் எத்தனை நாடுகள் உள்ளன,எத்தனை நகரங்கள் உள்ளன,அவற்றின் மக்கள் தொகை,ஒரு நாட்டிற்கும் மற்றோரு நாட்டிற்கும் இடையில் உள்ள தொலைவு,பகலில் உலகின் தோற்றம் - இரவில் உலகின் தோற்றம் என அனைத்தும் இந்த சாப்ட்வேரில் உள்ளது. தாய்நாட்டினை விட்டு பணியின் காரணமாக வெளியில் வேலை செய்யும் நண்பர்கள் தங்கள் நாட்டிலிருந்து பணிசெய்யும் நாடுவரை உள்ள தொலைவை சுலபமாக தெரிந்துகொள்ளலாம். இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு வி்ண்டோ ஓப்பன் ஆகும். இதில் மேல்புறம் கீழ்கண்ட மெனுபார் இருக்கும்.
இதில் நாடுகளை தேர்வு செய்யவும். மொத்தம் 270 நாடுகளின் பட்டியலும் அதன் Longitude - Latitude - மற்றும் அதன் மொத்த பரப்பளவும் மக்கள் தொகையும் இதில் விவரமாக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து நகரம் இதில் மொத்தம் 33,000 நகரங்களின் விவரங்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மெனுபாரினை கிளிக் செய்ய உங்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
இரவில உலகின் தோற்றம் படம் கீழே:
பகலில் உலகின் தோற்றம் கீழே:-
நீங்கள் உலகின் எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தின் பெயர்,மக்கள் தொகை,என அனைத்துவிவரங்களும் நமக்கு கிடைக்கும். அதுபோல நாம் வேலை செய்யும்  இடத்திற்கும் நமது சொந்த நாட்டிற்கும் இடையில் உள்ள தொலைவின் கிலோமீட்டரையும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.நாம் வேலைசெய்யும் இடத்தை மவுஸால் கிளிக்செய்து பின்னர்நமது இல்லம் இருக்கும் இடத்தை கிளிக்செய்தால் இடைப்பட்ட தொலைவு எவ்வளவு கிலோமீட்டர் என தெரியவரும்.பதிவினை பாருங்கள் கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
பொண்ணுபாக்க வராங்கலாம்..அலங்காரம் போதுமா..?






இன்றைய PSD டிசைன புகைப்படம் கீழே:-
டிசைன் செய்த பின வந்த படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-200 ஆவது பதிவும் -எனது பிறந்த நாளும்

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில்
இரண்டு முக்கிய விஷேஷங்கள். முதல் விஷேஷம் இத்துடன்
எனது பதிவு 200 -ஐ தொட்டுவிட்டது. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று
200 பதிவை அடைந்துவிட்டேன். இதுவரை சுமார் 275 பின்
தொடர்பவர்கள் உள்ளனர். 51,000 பார்வையாளர்கள் இதுவரை
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.ஒருபுறம் மகிழ்ச்சியாக
இருந்தாலும மறுபுறம் பயமாகவும் உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
அடுத்த வி்ஷேஷம் இன்று எனது பிறந்தநாள்
02.12.2009. உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்
வேலன்.



இது டூ-ன்- ஓன் புகைப்படம். பர்த்டேவுக்கும் ஆச்சு...
200 வது பதிவிற்கும் ஆச்சு.....



இனி இன்றைய பதிவினை பார்க்கலாம்.
கடுகு சிறியது ஆனால் காரம் குறையாது என்று சொல்வார்கள்.
அதுபோல் இது வெறும் 1.5 எம்.பி. அளவு உள்ள சாப்ட்வேர்தான்.
படங்களை பார்ப்பது மட்டும் அல்லாமல் அதை தம்ப்நெயில்
வியுவில் பார்க்கலாம். படங்களை எடிட் செய்ய முடியும்.
டிஜிட்டல் கேமராவிலிருந்து நேரடியாக இந்த சாப்ட்வேருக்கு
கொண்டுவரமுடியும். போட்டாக்கள் மூலம் ஸ்லைட்ஷோ
உருவாக்கலாம். பார்மட்டுகளை எளிதாக மாற்றலாம். ஒரே
கட்டளை மூலம் வேண்டிய அளவினை அனைத்துபடங்களுக்கும்
கொண்டு வரலாம். நீங்கள் பார்க்கும் படம் பிடித்திருந்தால் அதை
வால்பேப்பராக கொண்டுவரமுடியும். இமெஜ் பைல்தவிர
ஆடியோ -வீடியோவும் இதில் பார்க்கலாம்.
இனி இதில் என்ன என்ன வசதிகள் உள்ளன என பார்க்கலாம்.
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

நேரம் இன்மைகாரணமாக என்னால் ஒரளவிற்கே இதில்
உள்ள வசதிகளை காண முடிந்தது. நண்பர்கள் இந்த
சாப்ட்வேரை முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்துவிடுங்கள்.
முதலில் நீங்கள் படங்கள் உள்ள போல்டரை திறந்து
கொள்ளுங்கள். அடுத்து பைல் டேபை கிளிக் செய்து
அதில் உள்ள தம்ப் நெய்ல் கிளிக் செய்யுங்கள். கீழே
உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அடுத்துள்ள ஸ்லைட்ஷோ கிளிக் செய்யுங்கள். அல்லது கீ-
போர்டில் W -Key கிளிக் செய்யுங்கள். கீ்ழே உள்ள படத்தை
பாருங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள படங்களை Add செய்து வேண்டிய செட்டிங்ஸ்
சேர்த்து ஸ்லைட் ஷோ பாருங்கள்.
அடுத்துதான் முக்கியமான வசதி.... பைல் டேபில்
Batch Conversion/Rename கிளி்க் செய்யுங்கள்.அல்லது
கீ-போர்டில் B -Key அழுத்துங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் மொத்தம் மூன்று ரேடியோ பட்டன்கள் இருக்கும்.
Batch Conversion,Batch rename,Batch Conversion/Rename result
file என வேண்டியதை தேர்வு செய்யுங்கள்.
முதலில் உள்ள Batch Conversion கிளிக் செய்து அதில்
நீங்கள் மாற்றவேண்டிய பைல் பார்மட்டை தேர்வு
செய்யுங்கள். கீ்ழே உள்ள படத்தை பாருங்கள்.


அதைப்போல் நீங்கள் உங்கள் படத்தின் பெயர்களை
எளிதில் மாற்றிவிடலாம் கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இதனை நீங்கள் கிளிக் செய்திடும் சமயம் உங்களுக்கு
தேர்வு செய்த படத்துடன் பெயரும் வரும். தேவையான பெயரை
தட்டச்சு செய்து ஓ.கே.கொடுங்கள்.
அடுத்து எடிட் டேபிற்கு சென்று அதில் உள்ள
Show Paint dialog அல்லது F12 அழுத்துங்கள். உங்களுக்கு:
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுக்கு பெயிண்ட்டில் உள்ள வசதிகளுடன் டூல் கிடைக்கும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

வேண்டிய டூல் எடுத்து வேண்டியதை செய்து
கொள்ளுங்கள்.அதேப்போல் எடிட்டில் உள்ள
கிராப் வசதியை பயன்படுத்திபர்ருங்கள்.
அடுத்துள்ளது Image Tap கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் முதலில் உள்ள image information கிளிக் செய்ய
உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.

இதில் உங்கள் புகைப்படத்தின் மொத்த ஜாதகமே வந்து
விடும். தேவையான விவரங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
அடுத்துள்ள image nagative கிளிக் செய்ய உங்களுக்க
உங்களது படம் கீழ்கண்டவாறு மாறிவிடும்.

அடுத்துள்ள Color Corrections கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

தேவையான மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள்.
அடுத்துள்ளது image effects கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான
Effect தேர்வு செய்து உடன் ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம்.

அடுத்துள்ள Options கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் ஸ்கிரீன் ஷாட் முதல் நிறைய வசதிகள் உள்ளது.
தேவையானதை பயன்படுத்திப்பாருங்கள்.
அடுத்து வியு டேபை கிளிக் செய்யுங்கள்.


கீழ்கண்ட விண்டோவில் உள்ள வசதிகளை பயன்படுத்தி
பாருங்கள்.
படத்தின் தேவையான பகுதியை மட்டும் வேண்டிய அளவு
வெட்டி எடுக்கலாம்.கீழே உள்ள விண்டோவை பாருங்கள்.



பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.பயன்படுத்தி
பாருங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



JUST FOR JOLLY PHOTOS:-


இன்று பர்த்டே ஸ்பெஷலுக்கான புகைப்படம்

இன்றையPSD Design-34 புகைப்படம் கீழே:-



டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-



இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


வந்து வாழ்த்துக் கூறியவர்கள் இதுவரை:-

web counter



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

நாம் அன்றாடம் உண்ணும் உணவின் அட்டவணை(FOOD FILE)


நாம் அன்றாடம் உண்ணும் உணவின் 
அட்டவணை.(FOOD FILE)



நான் வலைப்பு_வில் எழுத ஆரம்பித்து எனது 25வது பதிவு

இது. உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை.அன்புடன் -வேலன். 
நாம் அன்றாடம் உணவு உண்ணுகின்றோம். 

பெரும்பாலும் பசிக்காகவும் சில சமயம் ருசிக்

காகவும் உண்ணுகின்றோம். ஆனால் அதில்

என்ன சத்து இருக்கின்றது - எந்த அளவு சத்து

இருக்கின்றது என நமக்கு தெரிவதில்லை.

மாறி வரும் உலகத்தில் புண்ணாக்கையும்

அழகிய பாக்கெட்டில் அழகாக பேக்பண்ணி

விற்றாலும் அதை வாங்குவதற்கும் ஆள்

இருக்கிறார்கள். அந்த கால பொருள்விளங்கா

உருண்டை(பொல்லங்கா உருண்டை),

சீடை, தட்டை , முறுக்கு, அதிரசம், கம்பு அடை,

கேழ்வரகு களி, கேழ்வரகு கூழ், சிம்னி,

குழிபணியாரம், புட்டு, இடியாப்பம், தேங்காய்

பால் ஆப்பம், காஞ்சிபுரம் இட்லி என அந்த

கால சிற்றுண்டிகளையும். சிறு திணிகளையும்

அடுக்கிகொண்டே போகலாம். அதில் நமக்கு

தேவையான சத்து அனைத்தும் நிறைந்திருந்தது.

அந்த கால மனிதர்கள் உடம்பு இந்த கால

மனிதருக்கு இருப்பதில்லை. இப்போது எல்லாம்

சர்க்கரைவியாதியும், Heart Attack -ம், 

சிறுவயதிலேயே கண்ணடி அணிதலும்,

சிறுநீரக வியாதிகளும் சிறுவயதிலேயே

அனைவருக்கும் வந்து விடுகிறது.

நாம் உண்ணும் உணவின் சத்துக்களான

Typical Values களான

1.Engergy,

2.Protein,

3.Carbohydrate,

4.Fat,

5.Fiber,

6.Sodium  என அனைத்தும் எந்த அளவு உள்ளது

என நமக்கு பட்டியலிட்டு காட்டுகிறது.

Detailed Nutritional Content (Per 100gm.Product)

எந்த அளவு சத்துக்கள் -வைட்டமின்கள்,

நீர் உள்ளது என தெளிவான அறிக்கையை

தருகின்றது. மேலும் FOOD FILE - ல் அதிகப்

படியாக என்ன உள்ளது (இனிப்பா - கொழுப்பா)

என அதையும் தனியே காட்டிவிடுகிறது.

இதில் மொத்தம் 7200 க்கும் மேலான

உணவு வகைகளையும் பட்டியலிட்டுள்ளது.

குழந்தைகள் உணவுமுதல் பெரியவர்களின்

உணவு வகைகள் வரை இதில் பட்டியலிட்டுள்ளது.

நமக்கு தேவையான உணவுகளையும்

சர்ச் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இனி எந்த ஒரு உணவு நாம் உண்ணாலும்

சரி மற்றவர்கள் சாப்பிட்டாலும் சரி- அதில்

என்ன சத்து உள்ளது. எவ்வளவு கொழுப்பு

உள்ளது, எவ்வளவு இனிப்பு உள்ளது என

தெரிந்து கொள்ளலாம்.

FOOD FILE க்கான இணைய தள முகவரி:-

http://www.kelpiesoft.com/

http://www.kelpiesoft.com/applib/foodfile/index.htm

தளம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
URL தேர்வு செய்ய ALT+D அழுத்தினால்
     பாதும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...