இனி இன்றைய பதிவினை பார்க்கலாம்.
கடுகு சிறியது ஆனால் காரம் குறையாது என்று சொல்வார்கள்.
அதுபோல் இது வெறும் 1.5 எம்.பி. அளவு உள்ள சாப்ட்வேர்தான்.
படங்களை பார்ப்பது மட்டும் அல்லாமல் அதை தம்ப்நெயில்
வியுவில் பார்க்கலாம். படங்களை எடிட் செய்ய முடியும்.
டிஜிட்டல் கேமராவிலிருந்து நேரடியாக இந்த சாப்ட்வேருக்கு
கொண்டுவரமுடியும். போட்டாக்கள் மூலம் ஸ்லைட்ஷோ
உருவாக்கலாம். பார்மட்டுகளை எளிதாக மாற்றலாம். ஒரே
கட்டளை மூலம் வேண்டிய அளவினை அனைத்துபடங்களுக்கும்
கொண்டு வரலாம். நீங்கள் பார்க்கும் படம் பிடித்திருந்தால் அதை
வால்பேப்பராக கொண்டுவரமுடியும். இமெஜ் பைல்தவிர
ஆடியோ -வீடியோவும் இதில் பார்க்கலாம்.
இனி இதில் என்ன என்ன வசதிகள் உள்ளன என பார்க்கலாம்.
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
நேரம் இன்மைகாரணமாக என்னால் ஒரளவிற்கே இதில்
உள்ள வசதிகளை காண முடிந்தது. நண்பர்கள் இந்த
சாப்ட்வேரை முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்துவிடுங்கள்.
முதலில் நீங்கள் படங்கள் உள்ள போல்டரை திறந்து
கொள்ளுங்கள். அடுத்து பைல் டேபை கிளிக் செய்து
அதில் உள்ள தம்ப் நெய்ல் கிளிக் செய்யுங்கள். கீழே
உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அடுத்துள்ள ஸ்லைட்ஷோ கிளிக் செய்யுங்கள். அல்லது கீ-
போர்டில் W -Key கிளிக் செய்யுங்கள். கீ்ழே உள்ள படத்தை
பாருங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள படங்களை Add செய்து வேண்டிய செட்டிங்ஸ்
சேர்த்து ஸ்லைட் ஷோ பாருங்கள்.
அடுத்துதான் முக்கியமான வசதி.... பைல் டேபில்
Batch Conversion/Rename கிளி்க் செய்யுங்கள்.அல்லது
கீ-போர்டில் B -Key அழுத்துங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் மூன்று ரேடியோ பட்டன்கள் இருக்கும்.
Batch Conversion,Batch rename,Batch Conversion/Rename result
file என வேண்டியதை தேர்வு செய்யுங்கள்.
முதலில் உள்ள Batch Conversion கிளிக் செய்து அதில்
நீங்கள் மாற்றவேண்டிய பைல் பார்மட்டை தேர்வு
செய்யுங்கள். கீ்ழே உள்ள படத்தை பாருங்கள்.
அதைப்போல் நீங்கள் உங்கள் படத்தின் பெயர்களை
எளிதில் மாற்றிவிடலாம் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதனை நீங்கள் கிளிக் செய்திடும் சமயம் உங்களுக்கு
தேர்வு செய்த படத்துடன் பெயரும் வரும். தேவையான பெயரை
தட்டச்சு செய்து ஓ.கே.கொடுங்கள்.
அடுத்து எடிட் டேபிற்கு சென்று அதில் உள்ள
Show Paint dialog அல்லது F12 அழுத்துங்கள். உங்களுக்கு:
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு பெயிண்ட்டில் உள்ள வசதிகளுடன் டூல் கிடைக்கும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
வேண்டிய டூல் எடுத்து வேண்டியதை செய்து
கொள்ளுங்கள்.அதேப்போல் எடிட்டில் உள்ள
கிராப் வசதியை பயன்படுத்திபர்ருங்கள்.
அடுத்துள்ளது Image Tap கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள image information கிளிக் செய்ய
உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் புகைப்படத்தின் மொத்த ஜாதகமே வந்து
விடும். தேவையான விவரங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
அடுத்துள்ள image nagative கிளிக் செய்ய உங்களுக்க
உங்களது படம் கீழ்கண்டவாறு மாறிவிடும்.
அடுத்துள்ள Color Corrections கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள்.
அடுத்துள்ளது image effects கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான
Effect தேர்வு செய்து உடன் ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம்.
அடுத்துள்ள Options கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஸ்கிரீன் ஷாட் முதல் நிறைய வசதிகள் உள்ளது.
தேவையானதை பயன்படுத்திப்பாருங்கள்.
அடுத்து வியு டேபை கிளிக் செய்யுங்கள்.
கீழ்கண்ட விண்டோவில் உள்ள வசதிகளை பயன்படுத்தி
பாருங்கள்.
படத்தின் தேவையான பகுதியை மட்டும் வேண்டிய அளவு
வெட்டி எடுக்கலாம்.கீழே உள்ள விண்டோவை பாருங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.பயன்படுத்தி
பாருங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
இன்று பர்த்டே ஸ்பெஷலுக்கான புகைப்படம்
இன்றையPSD Design-34 புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
வந்து வாழ்த்துக் கூறியவர்கள் இதுவரை:-