
அலுவலகத்திலும் சரி - பர்சனலாக இருந்தாலும் சரி நாம்
நமது கடிதத்தின் முகவரியை கவரில் சுலபமாக
பிரிண்ட் செய்யலாம். அதில் நமது புகைப்படத்தையும்
இணைக்கலாம். முதலில் வேர்ட் 2003 -ஐ திறந்து
கொள்ளுங்கள். அதில் கீழ்கண்டவாறு Tools-
Letters and Mailings-Envelops and Lables -என
திறந்துகொள்ளுங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.


அதில் Delivery Address -ல் நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
யை தட்டச்சு செய்யுங்கள். அடுத்து உங்கள் முகவரியை
தட்டச்சு செய்யுங்கள்.அடுத்து அதில் உள்ள Envelope
Options கிளிக் செய்து அதில் உள்ள Envelop Size-ல்
உங்களுக்கு தேவையான அளவை தேர்ந்தெடுங்கள்.

அடுத்துள்ள Delivery address ல் உள்ள Font-ஐ கிளிக்
செய்து அதில் உங்கள் விருப்பமான பாண்ட் தேர்வு
செய்யுங்கள். அடுத்து அதன் எதிரில் உள்ள From Left
மற்றும் From Top ல் உள்ள அளவை தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் அளவுகளை கொடுத்தவுடன் டெலிவரி அட்ரஸ்
நகர்வகை பிரிவியுவில் காணலாம்.

அடுத்து பிரிண்டிங் ஆப்ஸன் தேர்வு செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான அளவை
கிளிக் செய்யுங்கள்.

கடைசியாக Add to Document கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தான் கவர் ரெடி. இதில் உங்கள் புகைப்படங்கள் -லோகோ
வரவழைக்க இன்ஸ்ர்ட் உபயோகியுங்கள்.
கடிதங்களை தேர்வு செய்கையில் அதில் எண்ணைப்பசை
இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதுபோல் அதில்
சுருக்கங்கள் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ளவும்.கடிதத்தின்
உறை இங்கை உறிஞ்சாதவாறு இருத்தல் நல்லது.
இதைப்போல் வேர்டில் கடித உறை அச்சிடுவது பற்றிய
செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
டெஸ்டிங்க்காக இரண்டு மூன்று முறைகள் முயற்சி
செய்து பாருங்கள். சரியாக வரும்.
பதிவினை பாருங்கள். அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
SORRY .....NO COMMENT

இன்றைய PSD டிசைன்-31 படத்தின் போட்டோ கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீ்ழே:-