சென்ற பதிவில் கம்யூட்டரில் தமிழ்மொழியை
கொண்டு வர பாகம்-1ஐ பார்த்தோம்.
இன்றைய பதிவில் அதை எவ்வாறு உபயோ
கிப்பது என்று பாரக்கலாம்.
தமிழ்மொழியை கம்யூட்டரில் கொண்டுவருவது
மூலம் சுலபமாக தமிழில் கடிதங்கள் தட்டச்சு
செய்யலாம்.போல்டர்களுக்கு,பைல்களுக்கு
தமிழில்பெயர் வைக்கலாம்.டிரைவ்களுக்கு
தமிழில் பெயர் சூட்டலாம். விண்டோஸ்
அப்ளிகேஷன்கள் மற்றும் நோட்பேட்,வேர்ட்
பேட் ஆகியவற்றிலும் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
இப்போது முதலில் வேர்ட்பேடில் தமிழில்
தட்டச்சு செய்வதை காணலாம்.
முதலில் Start - All Programs - Accessories - Word Pad
திறந்து கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது டாக்ஸ்பாரில் உள்ள லாங்வேஜ் பாரை கிளிக்
செய்யுங்கள்.(நீங்கள் Alt+Shift கீயை ஒன்றாக அழுத்தியும்
மொழி மாற்றத்தை கொண்டுவரலாம்.) ரைட் . இப்போது
உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும்.
அதே சமயம் உங்கள் மொழியானது ஆங்கிலத்தில்
(ஏரியல்லில்) இருந்து தமிழுக்கு(லதாவிற்கு)
மாறியதையும் கவனியுங்கள்.கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
அவ்வளவுதான் .நீங்கள் இனி தமிழில் சுலபமாக
கடிதங்கள் தட்டச்சு செய்யலாம். நடுவில் ஆங்கிலம்
வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.சரி....
ஆங்கில கீ - போர்ட இருக்கு எழுத்துக்களை பார்த்து
தட்டச்சு செய்கின்றோம். தமிழில் கீ - போர்ட்டில்
எழுத்துக்கள் இல்லையே...அதை எவ்வாறு பார்த்து
தட்டச்சு செய்வது என நீங்கள் கேட்பது புரிகின்றது.
அதற்கும் முன்னரே நான் கம்யூட்டர் திரையில்ஆன்
கீ-போர்ட் உபயோகிப்பது எப்படி என பதிவிட்டுள்ளேன்.
நீங்கள் அங்கு சென்று விளக்கமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
அதில் தமிழ் மொழியை கொண்டுவர பாண்ட்டுகள்
பெயரில் லதாவைதேர்வு செய்துகொள்ளுங்கள்.
இப்போது கீ -போர்டில் லதாவிற்கான எழுத்துருக்கள்
இருப்பதை திரையில் காணலாம். இதுவரை
புரிகின்றதா.......சரி..
இப்போது போல்டர்களுக்கு தமிழில் பெயர்
வைப்பது எப்படி என பார்க்கலாம். ஏதாவது ஒரு
போல்டரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அதன்மீது கர்சரைவைத்து கிளிக் செய்யுங்கள்.
கீழே உள்ளதுபோல் விண்டோ தோன்றும்.
அதில் உள்ள ரீ-நேம் கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்கள் பேரல்டரில் முன்புஇருந்த
பெயரானது நீலகலரில் மாறிவிடும். இப்போது
தமிழில் பெயரை தட்டச்சு செய்யுங்கள்.
அவ்வளவுதான். இனி நீங்கள் தமிழில் கடிதங்கள் எழுதலாம்.
போல்டர்களுக்கு தமிழில்பெயர்வைக்கலாம்....
இனி சென்ற பதிவிற்கு வரலாம். சென்ற பதிவில்
இ-கலப்பை யை பற்றியும் என்.எச்.ரைட்டர்பற்றியும்
கருத்துரையில் காரசாரமாக விவாதித்தார்கள்.உங்கள்
வசதிக்காக இங்கு இ-கலப்பையையும் -என்.எச்.ரைட்
டரையும் இணைத்துள்ளேன். தேவைபடுபவர்கள்
தேவையானதை பதிவிறக்கி கொள்ளுங்கள்.தேவை
பட்டால் இரண்டையும் பதிவிறக்கி எது நன்றாக
உள்ளதோ அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பயன்படுத்தி கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
கீ போர்டை தமிழிலே மாத்தறத்துக்கு Shift Key கூட
வேறே எந்த கீயையோ அழுத்த சொன்னாரே...!!!
என்ன கீ அது ?
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்துள்ள படம் கீழே:-
இந்த டிசைனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்