புகைப்படங்களில் அனிமேஷன் கொண்டுவர
வழக்கமாக நாம் அடோப் கம்பனியின் அடோப்
இமேஜ் ரெடி சாப்ட்வேரினை பயன்படுத்துவோம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர்
அடோப் இமேஜ் ரெடி சாப்ட்வேர் செய்யும் வேலையை சுலபமாக செய்து முடிக்கின்றது. 1 எம்.பி.க்கும் குறைந்த கொள்ளளவு கொண்ட இதனை
பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். டவுண்லோடு செய்து கிளிக் செய்ததம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களிடம் உள்ள புகைப்படங்களை
டிராக் அன்ட் டிராப் முறையில்இழுத்துவந்து போடவும். பின்னர் ஒவ்வொரு புகைப்படத்திற்கும்
இடையில் எவ்வளவு செகண்ட் இடைவெளி வரவேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள். அடுத்து
நீங்கள் அதன் தரத்தின் அளவினை இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேர்வு செய்யவும்.
இறுதியாக இதில் உள்ள அனிமேட் கிளிக்செய்யவும்.உங்களுடையய அனிமேஷன் செய்யப்பட்ட
பைல் சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்யுங்கள். இப்போது சிறிது நேரம்
காத்திருங்கள்.உங்களது இமேஜ் ப்ராசசிங் ஆவதினை இதில் உள்ள லைடர் நகர்வது மூலம்
நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம்…கீழே உள்ளவிண்டோவினை பாருங்கள்.

பணி செய்து அனிமேஷன் ரெடியானதும் நீங்கள்
சேமித்துவைத்திருந்த இடத்தில் சென்று பார்த்தால் உங்கள் அனிமேஷன் படம்
கிடைத்திருக்கும்.. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.