வேலன்.:-புகைப்படங்களில் அனிமேஷன் கொண்டுவர


புகைப்படங்களில் அனிமேஷன் கொண்டுவர வழக்கமாக நாம் அடோப் கம்பனியின் அடோப்  இமேஜ் ரெடி சாப்ட்வேரினை பயன்படுத்துவோம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் அடோப் இமேஜ் ரெடி சாப்ட்வேர் செய்யும் வேலையை சுலபமாக செய்து முடிக்கின்றது.  1 எம்.பி.க்கும் குறைந்த கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். டவுண்லோடு செய்து கிளிக் செய்ததம்  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உங்களிடம் உள்ள புகைப்படங்களை டிராக் அன்ட் டிராப் முறையில்இழுத்துவந்து போடவும். பின்னர் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் இடையில் எவ்வளவு செகண்ட் இடைவெளி வரவேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள். அடுத்து நீங்கள் அதன் தரத்தின் அளவினை இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள அனிமேட் கிளிக்செய்யவும்.உங்களுடையய அனிமேஷன் செய்யப்பட்ட பைல் சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்யுங்கள். இப்போது சிறிது நேரம் காத்திருங்கள்.உங்களது இமேஜ் ப்ராசசிங் ஆவதினை இதில் உள்ள லைடர் நகர்வது மூலம் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம்…கீழே உள்ளவிண்டோவினை பாருங்கள்.
பணி செய்து அனிமேஷன் ரெடியானதும் நீங்கள் சேமித்துவைத்திருந்த இடத்தில் சென்று பார்த்தால் உங்கள் அனிமேஷன் படம் கிடைத்திருக்கும்.. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

5 comments:

சித்தாரா மகேஷ். said...

ரொம்ப நாளா தேடிக் கொண்டிருந்தனான் எப்பிடி பண்றதென்று தெரியாமல்.ரொம்ப நன்றி சகோதரா.பகிர்வுக்கு.முயற்சி செய்து பார்க்கிறேன்

Ganpat said...

நான் முயற்சி செய்து பார்த்தேன்.மூன்று புகைப்படங்களைப்போட்டு.ஒன்றும் ஆகவில்லை.படம் அப்படியேதான் இருக்கிறது.அனிமேஷன் ஆவது என்றால் என்ன?
நான் வைத்த settings அப்படியே default தான்.
நன்றி.

வேலன். said...

சித்தாரா மகேஷ். said...
ரொம்ப நாளா தேடிக் கொண்டிருந்தனான் எப்பிடி பண்றதென்று தெரியாமல்.ரொம்ப நன்றி சகோதரா.பகிர்வுக்கு.முயற்சி செய்து பார்க்கிறேன்ஃஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Ganpat said...
நான் முயற்சி செய்து பார்த்தேன்.மூன்று புகைப்படங்களைப்போட்டு.ஒன்றும் ஆகவில்லை.படம் அப்படியேதான் இருக்கிறது.அனிமேஷன் ஆவது என்றால் என்ன?
நான் வைத்த settings அப்படியே default தான்.
நன்றி.ஃஃ

முதலில் அனிமேஷன் என்றால் தெரிந்துகொள்ளுங்கள். எனது முந்தைய பதிவுகளை பாருங்கள்.
http://velang.blogspot.com/2009/11/animation.htmlஃ

http://velang.blogspot.com/2010/08/2.html

http://velang.blogspot.com/2010/07/blog-post_05.html

இப்போது புரியும் என எண்ணுகின்றேன். சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Ganpat said...

திரு.வேலன்..
உங்கள் உடனடி உதவிக்கு நன்றி.
அனிமேஷன் என்பதைப்பற்றி ஓரளவு புரிந்துகொண்டேன்.நான் முதலில் அப்லோட் செய்தது .jpg வகை படங்கள்.எனவே அதை மாற்றி .gif படங்கள் இரண்டினை அப்லோட் செய்தபோதும் ஒன்றும் ஆகவில்லை.
இதற்கான பிரத்யேக புகைப்படங்கள் ஏதேனும் தேவையா?புரியவில்லை.உங்கள் email முகவரியை சொன்னால் அந்த கோப்பை அனுப்பி வைக்கிறேன்மீண்டும் நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...