வேலன்:-பாயிண்டர் ஸ்டிக்.


படிக்கும் காலங்களில் வரலாறு-புவியியல் பாடங்கள் எடுக்கும் சமயம் போர்டில் பெரிய பெரிய மேப்களை மாற்றிவிட்டு நீண்ட கொம்புகொண்டு ஒவ்வொரு இடங்களைபற்றியும் ஆசிரியர் விளக்குவார்.அதைப்போல நாம் நமது கம்யூட்டரில் நீண்ட கொம்புகொண்டு ப்ரோகிராம்களை நாம் பார்க்கலாம்.வேர்டில் இதுபோல் ஒவ்வொரு வரியாக நாம் நீண்ட குச்சிகொண்டு பார்க்கலாம். சின்ன சாப்ட்வேரான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் கொம்பின் அளவினையும் அடர்த்தியையும் நிர்ணயிக்கலாம். அதைப்போல கொம்பின் நிறங்களையும் நாம் தேர்வுசெய்யலாம்.மேலும் தேவையான வசதிக்கு ஏற்ப ரேடியோபட்டன் மூலம் தேர்வு செய்யலாம்.


நான் தேர்வு செய்துள்ள சிகப்பு நிற கொம்பு படம் மேலே உள்ளது.இதன் மூலம் வேர்டில் நாம் வரிகளை சோதனை செய்ய பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

sakthi said...

அடிக்கவும் உதவும்னு சொல்லுங்க அண்ணா
கோவை சக்தி

ப.கந்தசாமி said...

youtube விடியோக்களை DVD க்கு மாற்ற முடியுமா? அதற்கான வழிமுறை என்ன? விளக்கம் கொடுத்தால் நன்றியுடையவனாவேன்.

வேலன். said...

sakthi said...
அடிக்கவும் உதவும்னு சொல்லுங்க அண்ணா
கோவை சக்திஃஃ

அடிக்கிறகைதான் அணைக்கவும் செய்யும். வருகைக்கு நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

பழனி.கந்தசாமி said...
youtube விடியோக்களை DVD க்கு மாற்ற முடியுமா? அதற்கான வழிமுறை என்ன? விளக்கம் கொடுத்தால் நன்றியுடையவனாவேன்ஃஃ

உங்களுக்கான பதிவிட்டுள்ளேன் சார். முகவரி தளம்:-http://velang.blogspot.in/2012/02/blog-post_22.htmlஃ

வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...