இணையத்தில் நாம் பார்க்கின்ற வீடியோ பைல்களை பதிவிறக்கம் செய்திடவும் வேண்டிய பார்மெட்டுக்குமாற்றிடவும் இந்த வீடியோ டவுண்லோட் சாப்ட்வேர் பயன்படுகின்றது. இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டிய வீடியோ வின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்யவும். பின்னர் இதில் உள்ள பேஸ்ட் யூஆர்எல் என்கின்ற டேபினை கிளிக் செய்யவும். பின்னர் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மூன்று விதமான ஆப்ஷன்கள் கொடுத்திருக்கின்றார்கள். வீடியோ பதிவிறக்கம் மட்டும்(இணையத்தில் வீடியோ எந்த பார்மெட்டில் இருக்கின்றதோ அதே பார்மெட்டில் பதிவிறக்கம் ஆகும்) அடுத்துள்ள ஆப்ஷனில் ஆடியோ மட்டும்-வீடியோ தவிர்த்து ஆடியோ பைல்கள் மட்டும் டவுண்லோடு ஆகும். அடுத்து கன்வர்ட் என்கின்ற ஆப்ஷனும் அதற்கு எதிரே ரேடியோ பட்டனை கொடுததுள்ளார்கள் அதனை கிளிக் செய்திட நிறைய பார்மெட்டுக்கள் நமக்கு கிடைக்கும் தேவையான பார்மெட்டினை நாம் தேர்வு செய்யலாம் மேலும் வீடியோ பதிவிறக்கம் ஆகும் இடத்தினையும் ;நாம் தேர்வு செய்திடலாம். கடைசியாக இதில் உள்ள டவுண்லோடு கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
நமது வீடியோ பைலானது எந்த வகையில் நாம் விரும்பினோமோ அந்த வகையில் பதிவிறக்கம் ஆகும். நாம் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment